
அருமையான படம். இப்படி ஒரு படம் தமிழில் பார்த்து ரொம்ப நாளாச்சு.
ஒரு பெண், அதுவும் கேட்கவும், பேசவும் முடியாத ஒரு பெண். அவளுக்கென்று ஒரு உலகம். அவளை விரும்பும் ஒருவன். அதை புரிந்து கொண்டு உதவும் நண்பர்கள் இப்படி எல்லாமே ரொம்ப புதுசா இருக்கு. இவ்வளவு சீரியஸான ஒரு கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் விதம் எல்லாமே அருமை அருமை.
ஜோதிகா கலக்கியிருக்காங்க. இது வரை ஜோதிகா நடிச்ச படங்கள்லயே இது தான் சிறந்ததுன்னு சொல்லலாம். அசத்தியிருக்காங்க. ப்ரகாஷ் ராஜுக்கு வழக்கம்போல இல்லாம வித்தியாசமான பாத்திரம். ஹீரோ ப்ருத்வி ராஜ் நல்லா நடிச்சிருக்காரு. அவர் குரல் நல்லா இருக்கு. ஆனா, பாவமே இல்லாம சில இடங்கள்ல பேசியிருக்காரு, அதை தவிர்த்திருந்தா, நல்லா இருந்திருக்கும்.
வித்யாசாகர் பாடல்கள் எல்லாம் அருமை. நல்ல மெலோடி. ஆனா, எனக்கென்னவோ, பாடல்கள் படத்தின் வேகத்தை குறைப்பதுபோல இருக்கு.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னோர் விஷயம், வசனம். சூப்பரா இருக்கு.
கண்டிப்பா இந்த படத்தைப் பாருங்க.
(images from sulekha.com)

5 comments:
nan podam porkanum
கண்டிப்பா பாருங்க திருமூர்த்தி.
சன் டி.வி. ட்ரெய்லரில், அவருடைய பாதுகாவலர் வந்து ஏதோ சொல்வார் அதற்கு ஜோதிகாவின் பதிலை மற்றவர்கள் மொழிவார்கள். அதைப் பார்த்த போதே, அட கண் ஜாடை, கை ஜாடையில் ஜோதிகா அசத்துதே என்று நினைத்தேன்.
//சன் டி.வி. ட்ரெய்லரில், அவருடைய பாதுகாவலர் வந்து ஏதோ சொல்வார் அதற்கு ஜோதிகாவின் பதிலை மற்றவர்கள் மொழிவார்கள். அதைப் பார்த்த போதே, அட கண் ஜாடை, கை ஜாடையில் ஜோதிகா அசத்துதே என்று நினைத்தேன்.//
உண்மை சுல்தான். படம் முழுவதுமே, ஜோதிகா அசத்தல்தான். அருமையான நடிப்பு.
வருகைக்கு நன்றி.
good review prasanna. I will definetly go and watch this movie.
Post a Comment