Wednesday, February 28, 2007

மொழி


அருமையான படம். இப்படி ஒரு படம் தமிழில் பார்த்து ரொம்ப நாளாச்சு.

ஒரு பெண், அதுவும் கேட்கவும், பேசவும் முடியாத ஒரு பெண். அவளுக்கென்று ஒரு உலகம். அவளை விரும்பும் ஒருவன். அதை புரிந்து கொண்டு உதவும் நண்பர்கள் இப்படி எல்லாமே ரொம்ப புதுசா இருக்கு. இவ்வளவு சீரியஸான ஒரு கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் விதம் எல்லாமே அருமை அருமை.

ஜோதிகா கலக்கியிருக்காங்க. இது வரை ஜோதிகா நடிச்ச படங்கள்லயே இது தான் சிறந்ததுன்னு சொல்லலாம். அசத்தியிருக்காங்க. ப்ரகாஷ் ராஜுக்கு வழக்கம்போல இல்லாம வித்தியாசமான பாத்திரம். ஹீரோ ப்ருத்வி ராஜ் நல்லா நடிச்சிருக்காரு. அவர் குரல் நல்லா இருக்கு. ஆனா, பாவமே இல்லாம சில இடங்கள்ல பேசியிருக்காரு, அதை தவிர்த்திருந்தா, நல்லா இருந்திருக்கும்.
வித்யாசாகர் பாடல்கள் எல்லாம் அருமை. நல்ல மெலோடி. ஆனா, எனக்கென்னவோ, பாடல்கள் படத்தின் வேகத்தை குறைப்பதுபோல இருக்கு.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னோர் விஷயம், வசனம். சூப்பரா இருக்கு.

கண்டிப்பா இந்த படத்தைப் பாருங்க.
(images from sulekha.com)Thursday, February 22, 2007

15. யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்


எனக்கு மின்னஞ்சலில் வந்த படம். அதை சுட்டு இங்கே போட்டிருக்கேன்.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர், ஜாவேத் மியாதாதின் மகனும், தாவூத் இப்ராஹிம் மகளுமாம்.

எனக்கு என்ன சந்தேகம்னா, இவ்வளவு நகைகளை போட்டுக்கிட்டு எப்படி விழாம பேலன்ஸ் பண்ணி நிக்க முடியுது???????

யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, February 19, 2007

புத்தகங்கள்

எங்கிட்ட இருக்கும் சில நல்ல, கெட்ட பழக்கங்களில், புத்தகம் படிப்பது ரொம்ப முக்கியமானது. குமுதம், விகடனில் இருந்து, எல்லா புத்தகமும் படிப்பேன். தமிழ், ஆங்கில நாவல்களும் படிப்பேன்.

இந்த சனிக்கிழமை, என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கும்போதுதான், landmark-க்கு இந்த மாச போணி பண்ணவேயில்லைன்னு ஞாபகம் வந்துச்சு. அடடா, தெய்வகுத்தம் ஆகிபோயிடுமேன்னு, உடனே landmark போய்ட்டேன். ரொம்ப யோசிச்சு, 2 புத்தகம், 5 CDs(1 Video, 5 Audio) வாங்கிட்டேன்.

ஒரு புத்தகம், project management பற்றியது. இன்னொன்னு, Aruthur Hailey - The money changers.

Project Management பற்றிய - A Comedy of Errors by "Prasanna kumar" (நான் இல்லை) படிச்சு முடிச்சாச்சு. Project Manager மட்டுமில்லாம, பொட்டி தட்டும் எல்லாரும் கணடிப்பாக படிக்கவேண்டும். (programmer, project manager and top management). இதை எழுதியிருப்பது, நம்ம சென்னை ஆளு. அதனால, அவருக்கு நாம எப்படியெல்லாம் யோசிப்போமுன்னு, நல்லா தெரிஞ்சிருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்காரு. ஆரம்பம் முதல், முடிவு வ்ரைக்கும் நல்ல நகைச்சுவை இருக்கு. அதுனால, படிக்கும்போது, bore-ஆ இல்லாம ரொம்ப ரசிக்க முடியுது. Hindu பேப்பரில் இந்த புத்தக விமர்சனம் வந்திருக்கு. அதைப் படிக்க இங்க போகணும். ِ

Arthur Hailey இன்னும் படிக்கலை. படிச்சிட்டு அதைப் பற்றி எழுதுறேன். என் விமர்சனத்துக்காக நீங்க எல்லாம் ஆவலா காத்திருக்கீங்கன்னு தெரியுது. ஆனா அதிக வேலைப் பளு காரணமா, உங்களையெல்லாம் காக்கவைக்கும்படி இருக்கு. கண்டிப்பா அடுத்த வாரம் அந்த புத்தக விமர்சனம் எழுதுறேன். மனசைத் தளர விடாதீங்க.

Wednesday, February 14, 2007

Happy Valentine's Day


அன்பர்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் - இனிய அன்பர் தின வாழ்த்துக்கள்.
If I had to live my life without you near me
The days would all be empty
The nights would seem so long
With you I see forever oh so clearly
I might have been in love before
But it never felt this strong

Our dreams are young
And we both know they'll take us
Where we want to go


Hold me now
Touch me now
I don't want to live without you

Nothing's gonna change my love for you
You ought know by now how much I love You
One thing you can be sure of
I'll never ask for more than your love

Nothing's gonna change my love for you
You ought know by now how much I love you
The world may change my whole life through
But nothing's gonna change my love for you

If the road ahead is not so easy,
Our love will lead the way for us
Like a guiding star
I'll be there for you if you should need me
You don't have to change a thing
I love you just the way you are
So come with me and share the view
I'll help you see forever too


Tuesday, February 13, 2007

குறும்பான குறுஞ்செய்தி SMS

நேற்று எனக்கு வந்த குறுஞ்செய்தி (ٍٍٍSMS)

Flash News : Pop singer and famous dancer Micheal Jackson died

do you know the reason ??????????

He got heart attack after watching T.R. Dance in Veerasaamy.

:)))))))))))))))))))))))))

உக்காந்து யோசிப்பாய்ங்களோ???????????????

_______________________________

இதே படத்துக்கு ஆனந்த விகடன் விமர்சனமும் ரசிக்கவைத்தது.
"பரிட்சைக்கு மார்க் போடலாம். விஷப்பரிட்சைக்கு?............."

:))))

Friday, February 9, 2007

GM Diet - திட்ட உணவு

உங்களுக்கு GM Diet பத்தி தெரியுமா? எனக்கு இப்போ தான் தெரியும்.

அதுக்கு முன்னாடி, Diet க்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? ரொம்ப யோசிச்சு, திட்ட உணவுன்னு எழுதியிருக்கேன். தெரிஞ்ச பெரியவங்க சொன்னா திருத்திக்கிறேன்.

இந்த GM diet, General Motors நிறுவனம், அவங்க தொழிலாளிகளுக்காக உருவாக்கியதாம். இந்த திட்டப்படி சாப்பிடுவதால், 7 நாளில், 5 முதல் 7 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம். அதுமட்டுமில்லாம, இது நம் உடலின் வேண்டாத கொழுப்பு சத்துக்களை கழுவி களைந்து விடுவதால், நாம், புதிதாக பிறந்தது போல ஒரு புத்துணர்ச்சி கிடைக்குமாம். எங்க office-ல கூட 2 பேரு இதை try பண்ணி எடையை குறைச்சிருக்காங்களாம்.

உங்களுக்கு oringial US Version வேணும்னா, இங்க click பண்ணுங்க

நம்ம இந்தியன் version இங்க குடுக்கிறேன்.

முதல் கண்டிஷன் : இதை follow பண்ணும் போது, நீங்க, தண்ணியடிக்கவோ, 'தம்' அடிக்கவோ, மற்ற எந்த விதமான போதை பொருளை சாப்பிடவோ கூடவே கூடாது. காபி, டீ உட்பட!!!!!!!!

2வது கண்டிஷன் : இதை follow பண்ணும் போது, நீங்க தினமும் 10 தம்ளர் தண்ணி (pure water) குடிக்கணும்.

முதல் நாள் : இன்னிக்கு முழுவதும் வெறும் பழங்கள் மட்டுமே சாப்பிடணும். வாழைப்பழம் கண்டிப்பா சாப்பிடக்கூடாது. பால் குடிக்க கூடாது. பழங்கள் எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். தர்பூசனி (water melon) நிறைய சாப்பிடுவது நல்லது. கலோரி அளவு குறைவாக உள்ள பழங்களை சாப்பிடுவது நல்லது.

2வது நாள் : காலை உணவுக்கு ஒரு முழு வேக வைத்த உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும். இன்னிக்கு முழுவதும், வெறும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட் வேண்டும். பச்சையாகவோ, அல்லது, வேக வைத்தோ சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். எண்ணை, தேங்காய் தவிர்க்கவேண்டும். இன்றும் பால் கூடாது.

3வது நாள் : இன்னிக்கு முழுவதும் காய்கறிகளும், பழங்களும் சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பால் கண்டிப்பா சாப்பிடக்கூடாது.

4வது நாள் : இன்று 8 வாழைப்பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டும். இது தவிர, 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும். 1 கப் வெஜிடபிள் சூப் சாப்பிட வேண்டும்.

5வது நாள் : இன்று 1 கப் சாதம், 6 தக்காளி சாப்பிட வேண்டும். கண்டிப்பாக 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6வது நாள் : இன்னிக்கு 2ம் நாள் போலவே, காய்கறிகள் சாப்பிட வேண்டும். 1 கப் சாதம் சாப்பிட வேண்டும்.

7வது நாள் : இன்னிக்கும் 2ம் நாள் போலவே, காய்கறிகள் சாப்பிட வேண்டும். 1 கப் சாதம் சாப்பிட வேண்டும். மற்றும் 1 கப் fruit juice சாப்பிட வேண்டும்.

முயற்சி பண்ணி பாருங்களேன்...........................................

Thursday, February 8, 2007

மறுபடியும் Match Fixing பூதம்

நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டில நம்ம பசங்க, நல்லா விளையாடி ஜெயிச்சாங்கன்னு சத்தியமா நினைச்சேன். ஆனா, அப்படி இருக்காது போல இருக்கு. Marlon Samuels பத்தி உங்களுக்கெல்லாம் தெரியும். அவர், Mukesh Kochar-ன்னு ஒரு bookie கூட பேசினாராம். அவங்க team பத்தின ரகசியமான் தகவலையெல்லாம் குடுத்தாராம். இந்த bookie, தாவூத் இப்ராஹிம் ஆளாம். Samuels, அவங்க மொதல்ல fielding பண்ண போற தகவலையும், Bowling order-ம் bookie கிட்ட சொன்னாராம். அது மட்டுமில்ல, போட்டி முடிஞ்சவுடனே, மும்பைல தங்கி இருக்க போறதாவும் சொன்னாராம். அதே மாதிரி தங்கியும் இருந்தாராம். இவங்களோட தொலைபேசி உரையாடலை, போலீஸ், record பண்ணி இருக்காங்களாம்.

இன்னும் match fixing-ன்னு உறுதியாகலைன்னாலும், இந்த நியூஸை படிச்சவுடனே ரொம்ப வெறுப்பா இருக்கு. இவங்க என்னிக்குதான் திருந்துவாங்களோ................????????????

ஒன்னு இவங்க திருந்தனும்...இல்லைன்னா நம்ம எல்லாரும் கிரிக்கெட் பாக்கறதை நிறுத்தனும்.

மேல் விவரங்களுக்கு இங்க போய் பாருங்க.

Wednesday, February 7, 2007

WikiCamp in ChennaiWikicamp is all about harnessing and understanding the power of Wikis. It is a one day event aimed to bring together the best minds from the Wiki/Internet space to talk about issues, opportunities and what the future and evolution of this valuable tool looks like.

Jimmy Wales, founder of Wikipedia and President of Wikimedia Foundation will be attending the event. He will share with us the vision for Wikipedia and his experiences.

When & Where?

The event is scheduled for the 25th of February, and the venue is at Tidel Park, Chennai.

For more information please check this link. Wikicamp.in

I have missed the blogcamp, i will not miss the wikicamp.in, i have already added my name to the participants list.

பாலகுமாரன் - Interview - எனக்குள் நான்

நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர், எழுத்துச் சித்தர், திரு. பாலகுமாரன் குமுதம் Web TV-க்காக ஒரு monologue பேட்டி அளித்துள்ளார். 

இதில் அவர் தன்னனப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும், தனது குருநாதர், திருவண்ணாமலை, யோகி ராம் சுரத்குமார் பற்றியும்,  தனது படைப்புகளை பற்றியும சொல்லியிருக்கிறார்.  

நீங்கள்,  இவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த பேட்டியை தவற விடக் கூடாது.பாலகுமாரன் - எனக்குள் நான்

Tuesday, February 6, 2007

How to read tamil posts and write tamil posts

I understand lot of people (!!??!!??) who read my blog do not have 
tamil fonts and hence they have probelm in reading the tamil posts. So all of them are worried that they are loosing some precious informations.   To help them, i am posting a link to the thenkoodu.com, in which they have described very clearly about how to read tamil posts and write tamil posts.  Please check it if you have any issues with tamil posts.

Well if you cant read tamil posts becuase you dont know tamil, then i will say, Go and LEARN TAMIL

 

புரியாத விஷயம்

சரி போன பதிவு ரொம்ப சீரியஸா பேசியாச்சு (அ) எழுதியாச்சு. இப்போ எனக்கு புரியாத ஒரு விஷயம் பத்தி உங்க கிட்ட கேக்கணும். நான் ஒண்ணுமே எழுதாத போதே, என் பதிவை படிக்க 44 பேரு (இதை எழுதும் வ்ரை) வந்திருக்காங்களே, இதுக்கு என்ன அர்த்தம்?
  • நான் ரொம்ப நல்லா எழுதறேனா? ( யாரு? யாரு சான்ஸே இல்லைன்னு சொல்றது. சின்னபுள்ளதனமா.)
  • நாட்டில் வெட்டி officers நிறைய இருக்காங்களா? ( No. நம்புங்க please. சத்தியமா, நான் உங்களை சொல்லலை. உங்களை தவிர மத்தவங்களை தான் சொன்னேன்.)
Anyway, இப்படி நிறைய பேரு படிச்சு மத்தவங்களுக்கும் சிபாரிசு செஞ்சீங்கன்னா, உங்க தயவுல என்னோட hit counter, increase ஆகும். உங்களுக்கும் உங்க சந்ததியினருக்கும் ரொம்ப ரொம்ப புண்ணியம் உண்டாகும். கூகிள் ஆண்டவர் அருள் கிடைக்கும்.

Verdict - Long awaited

The cauveri tribunal has finally given the verdict yesterday, after seventeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeen years. As usual situation is tense in Bengalooru. And as usual the Karnataka Government is NOT going to follow this. They are either going to ignore, as they did the interim judgement, or they may again approach supreme court.

I came to know through my friends that all the major areas in bangalooru is protected by police force and many major roads are blocked. Some of the IT companies announced an informal leave today. And all the trains from chennai to bengalooru were with police protection and most of them were empty.

The DMK Government in Tamilnadu has a strong say in the central Govertment at this moment. They have to utilize that to do whatever they can, through central government to make Karnataka obey the judgement. Mr. Karunanidhi has to show the same force he showed, when T.R.Balu and Dayanidhi Maran, did not get the desired portfolios.

Really Tamilnadu is a very poor state. We have to fight with Karnataka for cauvery, and with kerala for Mulla periyar and now with Andra for Palar. Earlier i was happy that Andra government is understanding and they are sharing the krishna water with Tamilnadu. But now it seems the relationship may affected due to the Palar issue. Is there any end to such issues?

Monday, February 5, 2007

My AdiSTAR

It was my long time wish to buy an excellent Adidas or Reebok. Though i have a Fila, i am not satisfied with it. Already i got rough skin on my toe due to the improper sized shoes. So considering all these i wanted to buy a shoe.

There was Adidas up to 50% sale is going on, so i went there on Sunday. I tried various shoes and really got impressed with the comfort and cushion of one particular shoe. when i saw the price i got shocked and kept that aside.

That sales person told me that they have even got costlier shoes up to 17K, and showed that to me. I tried that, my goodness, you should really try that to understand the comfort it gives
you. Anyway, i didn't buy that too (obviously). But i was totally impressed. At last I finalized the 7499 shoe which i kept aside. I got 40% discount.

I was hesistating for a long time (as usual), then i decided and bought. And i used it today during my walk. I really felt the comfort level and cushion. Really i felt it was worth buying that, though my wife and mum told that we could have bought half a sovereign of gold with that money. :)

Its called as adiSTAR control. Check the link for more details.