Monday, February 19, 2007

புத்தகங்கள்

எங்கிட்ட இருக்கும் சில நல்ல, கெட்ட பழக்கங்களில், புத்தகம் படிப்பது ரொம்ப முக்கியமானது. குமுதம், விகடனில் இருந்து, எல்லா புத்தகமும் படிப்பேன். தமிழ், ஆங்கில நாவல்களும் படிப்பேன்.

இந்த சனிக்கிழமை, என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கும்போதுதான், landmark-க்கு இந்த மாச போணி பண்ணவேயில்லைன்னு ஞாபகம் வந்துச்சு. அடடா, தெய்வகுத்தம் ஆகிபோயிடுமேன்னு, உடனே landmark போய்ட்டேன். ரொம்ப யோசிச்சு, 2 புத்தகம், 5 CDs(1 Video, 5 Audio) வாங்கிட்டேன்.

ஒரு புத்தகம், project management பற்றியது. இன்னொன்னு, Aruthur Hailey - The money changers.

Project Management பற்றிய - A Comedy of Errors by "Prasanna kumar" (நான் இல்லை) படிச்சு முடிச்சாச்சு. Project Manager மட்டுமில்லாம, பொட்டி தட்டும் எல்லாரும் கணடிப்பாக படிக்கவேண்டும். (programmer, project manager and top management). இதை எழுதியிருப்பது, நம்ம சென்னை ஆளு. அதனால, அவருக்கு நாம எப்படியெல்லாம் யோசிப்போமுன்னு, நல்லா தெரிஞ்சிருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்காரு. ஆரம்பம் முதல், முடிவு வ்ரைக்கும் நல்ல நகைச்சுவை இருக்கு. அதுனால, படிக்கும்போது, bore-ஆ இல்லாம ரொம்ப ரசிக்க முடியுது. Hindu பேப்பரில் இந்த புத்தக விமர்சனம் வந்திருக்கு. அதைப் படிக்க இங்க போகணும். ِ

Arthur Hailey இன்னும் படிக்கலை. படிச்சிட்டு அதைப் பற்றி எழுதுறேன். என் விமர்சனத்துக்காக நீங்க எல்லாம் ஆவலா காத்திருக்கீங்கன்னு தெரியுது. ஆனா அதிக வேலைப் பளு காரணமா, உங்களையெல்லாம் காக்கவைக்கும்படி இருக்கு. கண்டிப்பா அடுத்த வாரம் அந்த புத்தக விமர்சனம் எழுதுறேன். மனசைத் தளர விடாதீங்க.

3 comments:

sita said...

Hi Prasanna - good to see you writing in tamil. Reading books is a very good habit.

ப்ரசன்னா said...

thanks sita for visiting regularly and encouraging me with your comments

senthil said...

hi if u have e book for comedy of errors please do mail me. as of for me tat s the only book can motivate people easily,keep blogging like this -- informative to others also

bye man keep it up