உங்களுக்கு GM Diet பத்தி தெரியுமா? எனக்கு இப்போ தான் தெரியும்.
அதுக்கு முன்னாடி, Diet க்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? ரொம்ப யோசிச்சு, திட்ட உணவுன்னு எழுதியிருக்கேன். தெரிஞ்ச பெரியவங்க சொன்னா திருத்திக்கிறேன்.
இந்த GM diet, General Motors நிறுவனம், அவங்க தொழிலாளிகளுக்காக உருவாக்கியதாம். இந்த திட்டப்படி சாப்பிடுவதால், 7 நாளில், 5 முதல் 7 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம். அதுமட்டுமில்லாம, இது நம் உடலின் வேண்டாத கொழுப்பு சத்துக்களை கழுவி களைந்து விடுவதால், நாம், புதிதாக பிறந்தது போல ஒரு புத்துணர்ச்சி கிடைக்குமாம். எங்க office-ல கூட 2 பேரு இதை try பண்ணி எடையை குறைச்சிருக்காங்களாம்.
உங்களுக்கு oringial US Version வேணும்னா,
இங்க click பண்ணுங்க
நம்ம இந்தியன் version இங்க குடுக்கிறேன்.
முதல் கண்டிஷன் : இதை follow பண்ணும் போது, நீங்க, தண்ணியடிக்கவோ, 'தம்' அடிக்கவோ, மற்ற எந்த விதமான போதை பொருளை சாப்பிடவோ கூடவே கூடாது. காபி, டீ உட்பட!!!!!!!!
2வது கண்டிஷன் : இதை follow பண்ணும் போது, நீங்க தினமும் 10 தம்ளர் தண்ணி (pure water) குடிக்கணும்.
முதல் நாள் : இன்னிக்கு முழுவதும் வெறும் பழங்கள் மட்டுமே சாப்பிடணும். வாழைப்பழம் கண்டிப்பா சாப்பிடக்கூடாது. பால் குடிக்க கூடாது. பழங்கள் எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். தர்பூசனி (water melon) நிறைய சாப்பிடுவது நல்லது. கலோரி அளவு குறைவாக உள்ள பழங்களை சாப்பிடுவது நல்லது.
2வது நாள் : காலை உணவுக்கு ஒரு முழு வேக வைத்த உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும். இன்னிக்கு முழுவதும், வெறும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட் வேண்டும். பச்சையாகவோ, அல்லது, வேக வைத்தோ சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். எண்ணை, தேங்காய் தவிர்க்கவேண்டும். இன்றும் பால் கூடாது.
3வது நாள் : இன்னிக்கு முழுவதும் காய்கறிகளும், பழங்களும் சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பால் கண்டிப்பா சாப்பிடக்கூடாது.
4வது நாள் : இன்று 8 வாழைப்பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டும். இது தவிர, 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும். 1 கப் வெஜிடபிள் சூப் சாப்பிட வேண்டும்.
5வது நாள் : இன்று 1 கப் சாதம், 6 தக்காளி சாப்பிட வேண்டும். கண்டிப்பாக 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
6வது நாள் : இன்னிக்கு 2ம் நாள் போலவே, காய்கறிகள் சாப்பிட வேண்டும். 1 கப் சாதம் சாப்பிட வேண்டும்.
7வது நாள் : இன்னிக்கும் 2ம் நாள் போலவே, காய்கறிகள் சாப்பிட வேண்டும். 1 கப் சாதம் சாப்பிட வேண்டும். மற்றும் 1 கப் fruit juice சாப்பிட வேண்டும்.
முயற்சி பண்ணி பாருங்களேன்...........................................