Thursday, April 12, 2007

மனம் மயக்கும் கோவில்கள் - 2

முதல் பகுதி படிச்சிட்டீங்களா?

மீனாட்சி அம்மன் கோவிலில் நான் எடுத்த முக்குறுணி விநாயகர் படம். செல்பேசியில் எடுத்ததால் கொஞ்சம் மங்கலாக இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.... பெரிய உருவம்.

இதுல சிறப்பம்சம் என்னனா, இது ஒரே கல்லினால் ஆனதாம். நீங்க நேரில் பார்த்தீங்கன்னா இதோட பிரம்மாண்டம் உங்களுக்கு புரியும். விநாயகர் சதுர்த்தியின் போது 1000 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுமாம். கேட்கவே பிரமிப்பா இருக்கு...




கோவிலில் தவறாமல் பார்க்க வேண்டிய இன்னோரு இடம் ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளி சிலைகள். சொக்கநாதர் சன்னதிக்கு அருகில் இருக்கு. 4 பெரிய சிலைகள். முன்னாடி எல்லாம், வெண்ணை சாத்துறோம் பேர்வழின்னு மக்கள் வெண்ணை உருண்டைகளை சிலைகள் மேல் தூக்கி எறிவாங்க.. அதுனால 4 சிலைகளுமே வெண்ணை உருண்டைகளோட பயங்கரமா இருக்கும். இப்போ அதை தடை பண்ணிட்டாங்களாம். இப்போதான் அந்த சிலைகளோட முழு அழகும் தெரியுது. தடை விதிச்சவங்களுக்கு நன்றி.



அங்கே இருக்கும் இன்னோரு குறிப்பிட வேண்டிய விஷயம் பிரசவ சிலை. சொக்கநாதர் சன்னதிக்கு போகும் வழியில் ஒரு ஆஞ்சநேயர் சிலை தூணிலேயே இருக்கும். அதுக்கு செந்தூரம் தடவி ஆரஞ்சு கலரில் பார்த்தவுடனே பளிச்சுன்னு தெரியும். அதுக்கு எதிரே இன்னோரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் சிலை இருக்கு. கர்ப்பிணி பெண்கள் அதை வழிபட்டு அதுக்கு எண்ணை தடவினால், சுகப்பிரசவம் ஆகும்னு ஒரு ஐதீகமாம்.






கோவிலை விட்டு வெளியே வரும் வழியில், ஆயிரங்கால் மண்டபம் அருகே கயிறுகள், படங்கள், டாலர்கள், மணிகள், மரச் சாமான்கள் இதுபோல பலவும் விற்கும் கடைகள் ஏராளம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டமாக அந்த கடைகளில் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். கடைக்காரர்களுக்கு நல்ல வருமானம்னு நினைக்கிறேன்.







மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் போனோம். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்......

9 comments:

ப்ரசன்னா said...

வழக்கம் போல முதல் போணி நானே....

உண்மைத்தமிழன் said...

தெப்பக்குளத்தையும் அதன் நான்கு பகுதி படிக்கட்டுகளையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அழகு அழகான சிற்பங்களுடன் கூடிய தூண்களையும், பிரகாரத்தின் மேலே இருக்கும் சிற்பங்களையும், பக்கவாட்டுச் சுவர்களில் வரைந்திருக்கும் 64 திருவிளையாடல்கள் சிற்பக் கதைகளையும் விட்டுவிட்டீர்களே.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆன்மிகத்திற்காக மட்டுமல்ல.. சிற்பக் கலை, கட்டிடக் கலை, ஓவியக் கலை என்று அனைத்திற்குமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. என்ன செய்ய? பகுத்தறிவுவாதிகளின் 'பகுத்துயிர்' வேலையால் இந்த மாதிரியான பண்டைய கலைகளின் மதிப்பு இன்றைய தமிழர்களுக்குப் புரியாமல் இருக்கிறது..

ப்ரசன்னா said...

வாங்க சரவணன்

//மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆன்மிகத்திற்காக மட்டுமல்ல.. சிற்பக் கலை, கட்டிடக் கலை, ஓவியக் கலை என்று அனைத்திற்குமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. என்ன செய்ய? பகுத்தறிவுவாதிகளின் 'பகுத்துயிர்' வேலையால் இந்த மாதிரியான பண்டைய கலைகளின் மதிப்பு இன்றைய தமிழர்களுக்குப் புரியாமல் இருக்கிறது..//

ஆமாம்....கோவில் என்பது சாமி கும்பிட மட்டுமில்லை. அது ஒரு சமூகக் கூடமாகத்தான் அந்த நாளில் இருந்திருக்கிறது. அந்த கால கட்டிட கலைக்கும் சிற்பக் கலைக்கும் கோவில்கள்தான் இன்றளவும் சான்று.

//தெப்பக்குளத்தையும் அதன் நான்கு பகுதி படிக்கட்டுகளையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அழகு அழகான சிற்பங்களுடன் கூடிய தூண்களையும், பிரகாரத்தின் மேலே இருக்கும் சிற்பங்களையும், பக்கவாட்டுச் சுவர்களில் வரைந்திருக்கும் 64 திருவிளையாடல்கள் சிற்பக் கதைகளையும் விட்டுவிட்டீர்களே.//

இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்குமுன்னு நினைச்சேன் அதுதான் அதை பத்தி எழுதலை. அந்த படங்கள் கொஞ்சம் இருக்கு. அடுத்த பகுதியில் போடுறேன்.

வருகைக்கு நன்றி.

Anonymous said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க. எங்களயுமெல்லாம் கோவில்களுக்கு
அழைச்சென்றமைக்கு. முக்குறுனிப் பிள்ளையார் அழகாக
இருக்கிறார். எதசொல்லுறது என்றே தெரியல்ல. எங்கும் அருள்.
எங்கும் பக்தி. எங்கும் நிறைவு.
பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.

ப்ரசன்னா said...

நன்றி அனானி.

சிவமுருகன் said...

அடடா, அருமையையா அருமை.

ரொம்ப நாளா ஒரு பிள்ளையார் படம் கூட பார்க்க முடியல. இப்ப பாருங்க, ஒரு முக்குறுணி விநாயகரே வந்துட்டார்.

நம்ம பதிவுல கூட இவர் தான் போணி இதே சந்தன அலங்காரம்.

ஆமா சார் பிரம்மாண்டம் அவர பார்த்தா தான் தெரியும்.

1000 கிலோ இல்ல - 18படி அரிசில கொழுக்கட்டை செய்வாங்க.

ப்ரசன்னா said...

//அடடா, அருமையையா அருமை.//

//1000 கிலோ இல்ல - 18படி அரிசில கொழுக்கட்டை செய்வாங்க.//

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சிவமுருகன். வீட்டில் இணைய இணைப்பில் ஏதோ பிரச்சனை, அதனால் உங்கள் பின்னூட்டத்தை உடனே வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும்.

துளசி கோபால் said...

என்னது 'பிரசவ' சிலையா? அடடா.......... எத்தனைமுறை
இந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன்? கண்ணுலேயே படலையே எனக்கு?

ப்ரசன்னா said...

//என்னது 'பிரசவ' சிலையா? அடடா.......... எத்தனைமுறை
இந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன்? கண்ணுலேயே படலையே எனக்கு?//

ஆமா டீச்சர். அனுமன் சிலைக்கு எதிரே இருக்கு. எனக்கு கூட இது பத்தி தெரியாது. இந்த முறை எங்க பாட்டி கூட வந்திருந்தாங்க. அவங்க சொல்லித்தான் தெரியும். அடுத்த முறை தவறாமல் பாருங்க...