Wednesday, March 28, 2007
BCCI யில் ஆளெடுக்குறாங்கோ...
காலியிடங்கள் ::
1. கேப்டன் (BCCPC 0001) - ஒரு இடம்
2. கோச் (BCCPC 0002) - ஒரு இடம்
3. அணி வீரர்கள் (?!?) - 15 இடங்கள்
தகுதி ::
1. TV-ல் கிரிக்கெட் போட்டிகளை பார்த்திருக்க வேண்டும்
2. புத்தக கிரிக்கெட்டில் (அ) தெரு கிரிக்கெட்டில் குறைந்த பட்சம் 65 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்
3. மாடல்கள், விளம்பர நடிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
4. கோச் பதவிக்கு LKG அல்லது UKG ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு முறை::
1. பேட்டிங் தேர்வு : பெர்மூடாவுடன் ஒரு தேர்வு போட்டி நடக்கும். போட்டியில் குறைந்தது 15 ரன்கள் எடுக்கவேண்டும்
2. பெளலிங் தேர்வு : ஒரு ஓவர் பந்து வீச வேண்டும். ( 3 வைட் / நோ பால்களுக்கு மேல் இருக்கக் கூடாது)
குறிப்பு :: கண்டிப்பாக தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.
விண்ணப்பங்களை உங்கள் பெயர்/பதவி/அதிக பட்ச ரன்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு callforcric@bcci.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
தேர்வு நடைபெறும் இடம் : நடேசன் பார்க், தி. நகர், சென்னை.
தேர்வு நாள் : 1 ஏப்ரல் 2007
முந்துங்கள்.... முந்துங்கள்..........
மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட புத்தகங்களைப் பார்க்கவும்
" நீங்களும் பேட்ஸ்மேன் ஆகலாம் "- எழுதியவர் முனாப் படேல்
"21 நாட்களில் கிரிக்கெட்" - எழுதியவர் "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்" சித்து
"உங்கள் வீட்டை பாதுகாப்பது எப்படி" - எழுதியவர் தோனி
இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.........
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
:)))
கலக்குங்க பிரசன்னா
சென்ஷி
குங்குமம் உலகக்கோப்பை பரிசுப்போட்டி மாதிரில்ல இருக்கு!.
//:)))
கலக்குங்க பிரசன்னா
சென்ஷி//
வாங்க சென்ஷி... நன்றி. இது என்னோட சொந்த சரக்கு இல்லை. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை என்னால் முடிஞ்ச அளவு தமிழ்படுத்தியிருக்கேன்.
இதுதான் முதல் வருகைன்னு நினைக்கிறேன். அடிக்கடி வாங்க..
இங்க என்னோட வெர்சனை பாருங்க :))
Updated information on Selection
I am selected!!! but dropping the offer as the package was not good.
(BCCI Planning to come up with performace linked pay also restrictions on appearing in Ad's)
பிரசன்னா, சிபாரிசு கடிதம் விட்டுடீங்களே! அது இல்லாம எப்படி தேர்வுக்குழு நேர்முகற்குள் அனுமதிப்பார்கள்? ;-)
//(BCCI Planning to come up with performace linked pay also restrictions on appearing in Ad's)// I dont think they will do that magi. But will be happy if they do.
Let us wait and see. Thanks for your comments
//பிரசன்னா, சிபாரிசு கடிதம் விட்டுடீங்களே! அது இல்லாம எப்படி தேர்வுக்குழு நேர்முகற்குள் அனுமதிப்பார்கள்? ;-)//
சூப்பரா சொன்னீங்க... இப்போ டீமில் இருக்குற நிறைய பேரு இப்படி வந்தவங்கதானாமே???????
இந்த வார ஸ்டார் பின்னூட்டமிட்டதில் மகிழ்ச்சி. இதுதான் ஸ்டார் பின்னூட்டம். :)) நன்றி ஜெஸிலா... அடிக்கடி வாங்க...
Post a Comment