Tuesday, March 13, 2007

500 பதிவுகளுக்கும் மேல் பதிவிடுவது எப்படி?

தமிழ் வலையுலகின் மூத்த பதிவர் துளசி டீச்சர் அவர்களின் 500வது பதிவில், நான் அவங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேன்.

// 500-ஆஆஆஆ!!!!!!!!!! பிரமிப்பா இருக்கு. எனக்கு ஒரு 10 பதிவுக்குள்ளயே, மூச்சு திணறிப்போச்சு. அந்த பத்து கூட சினிமா, புத்தகம், கட்டுரைன்னு ஜல்லியடிச்சிட்டு இருக்கேன். உங்களால எப்படி தான் முடிஞ்சதோ? அந்த ரகசியத்தை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்? (இதெல்லாம் சொல்லிக்குடுத்து வர்ரதில்லைன்னு நீங்க சொல்லுறது கேக்குது)//

அதுக்கு டீச்சர் சார்பா க்ளாஸ் லீடர் இலவசக் கொத்தனார் பதில் சொல்லியிருந்தார்.

//கண்ணைத் திறந்து வெச்சுக்குங்க. உங்களைச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க. சுத்தி நடக்கற விஷயங்களில் கவனமா இருந்தீங்கன்னா பத்து பதிவென்ன, 500 பதிவே போடலாம்.//

யோசிச்சு பார்த்தா, இது ரொம்ப சரியான கருத்து. பதிவிடுவதற்கு விஷயமா இல்லை? எவ்வளவோ இருக்கு. நம்ம தான் விழிப்பா இருக்கணும். நம்மைச் சுற்றி என்ன நடக்குதுன்னு பார்த்து, மனசில பதிஞ்சுக்கணும். அதை அப்படியே நம்ம வலைப்பதிவுல வெளிப்படுத்தணும். இப்படி செய்தால், 500க்கும் மேலே பதிவுகள் போடலாம்.

இதை எல்லா புதிய வரவுகளுக்கும் தெரிவிக்கணும்னு தான் தனிப்பதிவா போட்டிருக்கேன். இந்த அருமையான பாடத்தை சொன்ன துளசி டீச்சருக்கும், அதை என்போன்ற புதியவர்களுக்கு எடுத்து சொன்ன க்ளாஸ் லீடர் கொத்தனாருக்கும் நன்றி, நன்றி நன்றி.



16 comments:

துளசி கோபால் said...

கொத்ஸின் பிடுங்கல் தாங்காம இப்ப ஒரு பதிவு ஆச்சு. இனி பின்னூட்டம்
வாங்கறதுக்கும் கொத்ஸ்தான் இங்கே வந்து சொல்லிக் கொடுக்கணும்போல இருக்கு.

ஆமாம்..பிரசன்னா, இதைத் தமிழ்மணத்துலே 'அளி'க்கலையா?

மைக் டெஸ்டிங்.1 ...2..... 3

கொத்ஸ், எங்கே இருந்தாலும் தயவு செய்து உடனே மேடைக்கு வரவும்.

இலவசக்கொத்தனார் said...

மன்னிச்சுக்குங்க தலைவா. பதிவு போட்ட உடனே வர முடியலை. நம்ம வார்த்தையைப் போயி தனிப்பதிவா போட்டு ரொம்ப டென்ஷன் படுத்திட்டீங்களே!! :))

நன்றி நன்றி! எல்லாப் பெருமையும் டீச்சருக்கே!!

ப்ரசன்னா said...

வணக்கம் டீச்சர்,

முதல் முதலாய் வந்துருக்கீங்க.. என்ன சாப்பிடறீய???? கலரு.... ஜோடா?????

கொத்ஸ் பிடுங்கல் எல்லாம் இல்லை. உண்மையிலேயே அவர் சொன்னது ரொம்ப நல்லா இருந்தது. அதனாலதான் தனி பதிவு போட்டேன். "பின்னூட்ட நாயகி" நீங்க வந்து பின்னூட்டம் போட்டதுனால இனிமே எனக்கும் நிறைய பின்னூட்டம் வரும்னு நினைக்கிறேன். இருந்தாலும் கொத்ஸ் அதுக்கும் உங்க க்ளாஸ்ல கத்துக்கிட்டத சொல்லிக் கொடுத்தார்னா நல்லாதான் இருக்கும்.

கொத்ஸ் டீச்சர் கூப்பிடறாங்க பாருங்க. உடனே வாங்க.

டீச்சர் தமிழ் மணத்துல இதை "அளி"த்தேன். ஆனா இதுல குத்தம்னு சொல்லிட்டாக. நான் எ-கலப்பையை கொண்டு யூனிகோடு தமிழில்தான் பதிகிறேன். இருந்தாலும் யூனிக்கோடு தமிழின் அடர்த்தி போதுமானதாக இல்லைன்னு சொல்லிட்டாக. மேற்கொண்டு யாரை கேக்குறதுன்னு தெரியலை. அதுக்கும், க்ளாஸ் லீடரோ, சக மாணவர்களோ உதவி செஞ்சா நல்லா இருக்கும். டீச்சருக்கு நேரமிருந்து டீச்சரே உதவி செஞ்சா சூப்பருதான். (ஆஹா இதையே ஒரு தனிப்பதிவா போட்டிருக்கலாம் போல இருக்கே)

தங்கள் வருகைக்கு நன்றி டீச்சர். அடிக்கடி இந்த பக்கம் வந்து எட்டி பார்த்துட்டு போங்க.....

இலவசக்கொத்தனார் said...

அப்பூ, நான் போட்ட பின்னூட்டம் எங்கப்பூ? அதைப் பார்க்காம டீச்சர் நம்மளைக் கேள்வி கேட்டே...

இலவசக்கொத்தனார் said...

//இருந்தாலும் கொத்ஸ் அதுக்கும் உங்க க்ளாஸ்ல கத்துக்கிட்டத சொல்லிக் கொடுத்தார்னா நல்லாதான் இருக்கும். //

ஆஹா! இதுக்கு நம்ம இன்னொரு வாத்தியார் டாக்டர் இராமநாதன் என்ற இணையக் கோனார் நோட்ஸ் போட்டு இருக்காரு, நம்ம லேட்டஸ்ட் பதிவின் பின்னூட்டங்களில் அதற்கான சுட்டி இருக்கே.

இலவசக்கொத்தனார் said...

//இருந்தாலும் யூனிக்கோடு தமிழின் அடர்த்தி போதுமானதாக இல்லைன்னு சொல்லிட்டாக.//

நிறையா பதிவுகள் இருக்கே. தமிழ்மணத்துக்கு ஒரு தனிமடல் அனுப்புங்க. அவங்க அதை பரிசீலனை பண்ணிட்டு சேர்த்துப்பாங்க.

இலவசக்கொத்தனார் said...

வேற என்னவாவது இருக்காப்பா? டைரக்ட்டா டீச்சர் கிட்ட போற, என்னைப் பத்தி என்னதாவது இல்லாததும் பொல்லாததுமா போட்டுக் குடுத்துடப் போறே!

ப்ரசன்னா said...

வாங்க கொத்ஸ். மன்னிச்சுக்குங்க..கொஞ்சம் தாமதமாகிப்போச்சு. நீங்களும் இப்போதான் முதல் முறையா வந்துருக்கீக.. உங்களுக்கும் ஜோடா குடுக்கலாம்னு பார்த்தா... நீங்களே ஜோடாவை கையில வச்சிருக்கீகளே...

//ஆஹா! இதுக்கு நம்ம இன்னொரு வாத்தியார் டாக்டர் இராமநாதன் என்ற இணையக் கோனார் நோட்ஸ் போட்டு இருக்காரு, நம்ம லேட்டஸ்ட் பதிவின் பின்னூட்டங்களில் அதற்கான சுட்டி இருக்கே.//

நன்றி. அதைப் பார்த்துட்டு ஏதாவது சந்தேகம்னா உங்ககிட்ட கேக்குறேன்

//நிறையா பதிவுகள் இருக்கே. தமிழ்மணத்துக்கு ஒரு தனிமடல் அனுப்புங்க. அவங்க அதை பரிசீலனை பண்ணிட்டு சேர்த்துப்பாங்க.//

ஓஹோ அப்படியா.. இப்போவே தனிமடல் அனுப்புறேன். தகவலுக்கு ரொம்ப நன்றி.

டீச்சரும், லீடரும் வந்து பின்னூட்டம் இட்டது ரொம்ப சந்தோஷம்.

ப்ரசன்னா said...

test

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னப்பா இது 2004 ல ஒரு பதிவு
அப்புறம் 2005 ல் ஒன்னு கூட இல்ல 2006 கடசீல ரெண்டு இருக்கு..இப்படி போனா எப்படி 500 பதிவு போடறது..
கண்டிப்பா கிளாஸ் எடுக்கறது மட்டுமில்லாம...தனியா டியுசன் வச்சு வேற கொஞ்சம் படிக்கனும் சொல்லிட்டேன்.

ப்ரசன்னா said...

வாங்க முத்துலெட்சுமி. வணக்கம்

//என்னப்பா இது 2004 ல ஒரு பதிவு
அப்புறம் 2005 ல் ஒன்னு கூட இல்ல 2006 கடசீல ரெண்டு இருக்கு..இப்படி போனா எப்படி 500 பதிவு போடறது..
கண்டிப்பா கிளாஸ் எடுக்கறது மட்டுமில்லாம...தனியா டியுசன் வச்சு வேற கொஞ்சம் படிக்கனும் சொல்லிட்டேன்.//

2004-ல ஏதோ ஒரு வேகத்தில பதிவு தொடங்கிட்டேன். அப்போ எனக்கு தமிழ் பதிவுகள் பத்தி தெரியாது. அதுனால பெருசா ஆர்வம் ஏதும் ஏற்படலை. ஒரு நண்பர் மூலமா 2006 நவம்பரில் தமிழ் பதிவுகளுக்கான் அறிமுகக் கிடைச்சது. அதுக்கு அப்புறம் தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன். கொத்ஸ் சொன்னபடி தனி மடல் அனுப்பி, இப்போ என்னோட பதிவு தமிழ் மணத்தில் தெரியுது.

பாடத்தை நல்லா கத்துகிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். போக போக இன்னும் நிறைய பதிவுகள் போட்டு க்ளாஸ் லீடர், டீச்சர் பேரை காப்பாத்துவேன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க...

சந்திப்பு said...

500 பதிவு போட்ட டீச்சருக்கும், மிக விரைவாக 5 செஞ்சுரிகளை அடிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். இலவச கொத்தனாரின் டிப்° ரொம்ப யூ°புல்தான்... பிச்சிடிங்க அப்பு..

சந்திப்பு said...

500 பதிவு போட்ட டீச்சருக்கும், மிக விரைவாக 5 செஞ்சுரிகளை அடிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். இலவச கொத்தனாரின் டிப்° ரொம்ப யூ°புல்தான்... பிச்சிடிங்க அப்பு..

ப்ரசன்னா said...

//500 பதிவு போட்ட டீச்சருக்கும், மிக விரைவாக 5 செஞ்சுரிகளை அடிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். இலவச கொத்தனாரின் டிப்° ரொம்ப யூ°புல்தான்... பிச்சிடிங்க அப்பு..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இலவசக்கொத்தனார் said...

தமிழ்மணத்தில் பதிவு தெரியுது. ஆனா தமிழ்மணப் பட்டையை பதிவில் காணுமே! அது இல்லாம அணமையில் மறுமொழியப் பட்ட பதிவுகள் பகுதியில் உங்க பதிவு தெரியாதே! அதையும் ஏற்பாடு பண்ணுங்க. டீச்சர் 500 பதிவு போட்டவங்க மட்டும் இல்லை. பின்னூட்ட நாயகி அப்படின்னு பேர் எடுத்து இருக்கரவங. அவங்க மாணவன் அப்படின்னு நீங்கலும் பின்னூட்டம் வாங்கிக் குவிக்க வேண்டாமா? :))

ப்ரசன்னா said...

//தமிழ்மணத்தில் பதிவு தெரியுது. ஆனா தமிழ்மணப் பட்டையை பதிவில் காணுமே! அது இல்லாம அணமையில் மறுமொழியப் பட்ட பதிவுகள் பகுதியில் உங்க பதிவு தெரியாதே! அதையும் ஏற்பாடு பண்ணுங்க. டீச்சர் 500 பதிவு போட்டவங்க மட்டும் இல்லை. பின்னூட்ட நாயகி அப்படின்னு பேர் எடுத்து இருக்கரவங. அவங்க மாணவன் அப்படின்னு நீங்கலும் பின்னூட்டம் வாங்கிக் குவிக்க வேண்டாமா? :))//

நன்றி கொத்ஸ். பட்டை போட்டேன் ஆனா தெரியலை. என்ன விஷயமுன்னு பார்க்கணும். விரைவில் சரி செஞ்சிடுறேன். டீச்சரோட மாணவன்னு சொல்லிக்கறதே எனக்கு பெருமைதானே. அவங்க அளவுக்கும், உங்க அளவுக்கும் பின்னூட்டம் வாங்கனும்னு ஆசைதான். முயற்சி பண்ணி பார்ப்போம்.