Tuesday, April 10, 2007

மனம் மயக்கும் கோவில்கள் - 1

நிச்சயமா இது துளசி டீச்சரோட நெஞ்சாங்கூட்டில் நிற்பதுக்கு போட்டி இல்லீங்க. போன வாரம் ஒரு 5 நாள் மதுரை, சிவகங்கையை சுற்றி இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் கோவில்களுக்கு போயிருந்தேன். அதைப் பற்றி சொல்லலாம்னு நினைக்கிறேன்

முதலில் சென்னையிலேருந்து திருச்சி வழியா மதுரைக்கு போகும் போது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போனோம். நாங்க போனது வியாழன், அதுனால கோவிலில் கூட்டம் இல்லை. நல்ல தரிசனம்.

அங்க நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்த கோவிலின் சூப்பரண்டு அம்மா... சன்னதிக்கு முன்னாடி நின்னு கத்திகிட்டு, பக்தர்கள் எல்லாரையும் தரக்குறைவா பேசிட்டு இருந்தாங்க... எனக்கு இது பிடிக்கலை. அவங்களிடம் எடுத்துச் சொன்னபோது, என்னை வேலையை பார்த்துட்டு போகச் சொன்னாங்க... எனக்கு ரொம்ப கோவம் வந்தது. ஆனா, அந்த இடத்தில நான் அவங்களை கத்தினா, அவங்க செஞ்ச அதே தப்பை நானும் செய்வேன்னு நினைச்சு வாயை மூடிட்டு வந்துட்டேன். அந்த அம்மாவுக்கா இது எவ்வள்வு தப்புன்னு தெரிஞ்சா சரி....

பின் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து சேர்ந்தோம். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவிலுக்கு சென்றோம். நான் சிவகங்கைல படிக்கும்ப்போது ஒவ்வோரு வெள்ளியும் தவறாமல் இந்த கோவிலுக்கு போவேன். கிட்டத்தட்ட 7 வருஷம் கழிச்சு இப்போதான் போக நேரம் கிடைச்சது. அதுவும் முதல் முறையா இந்த கோவிலுக்கு தங்கமணி, குழந்தையோட போனது மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது. இத்தனை வருஷ இடைவெளியில் கோவில் எந்த விதத்திலும் மாறலை. போகும் வழியில் நான் வளர்ந்த வீடு, படிச்ச ஸ்கூல், காலேஜ் எல்லாம் போய் பார்த்தோம். அதுனால வழி முழுதும் ஒரே "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" தான். சைக்கிள் மட்டும்தான் இல்லை.


உங்களுக்கு நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவிலைப் பற்றி தெரியுமா? ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். வரப்ப்ரசாதி. கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக மக்கள் அங்க வேண்டிக்குவாங்க... மாவிளக்கு ஏத்துவதும், கண் மலர் சாத்துவதும் எப்பவுமே நடக்கும். நீங்க இதுவரை பார்க்கலைன்னா கண்டிப்பாக ஒரு தடவை வந்து பாருங்க... இது சிவகங்கையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகரத்தார்கள் அதிகம் இருக்கும் ஊர். இங்க 80% மக்கள், கண்ணாத்தாள், கண்ணப்பன் னு பேர் கொண்டவங்களா இருப்பாங்க. flickr-ல் கிடைத்த கோபுரம் படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். அம்மன் படம் flash animation-ல் இங்க இருக்கு.

பின்னர் அங்கிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனோம். வெள்ளிக்கிழமை, அதோட விடுமுறை நாள் வேற, கூட்டத்துக்கு கேக்கணுமா...ஏதோ அங்கு இருக்கும் என் மாமா தயவில தூரத்தில இருந்து மீனாட்சி தரிசனம் கிடைச்சது. மீனாட்சிக்கு இருக்கும் கூட்டம் சொக்கநாதருக்கு இல்லை. அதுனால சொக்கநாதர் நல்ல தரிசனம். தங்கமணி இந்த கோவிலுக்கு வருவது இதுதான் முதல்முறை. அதுனால மறுபடியும் நாந்தான் கைடு. முக்குறுணி விநாயகர், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் எல்லாம் விளக்கிச் சொன்னேன். கொஞ்ச நாள் முன்பு யானை இறந்து போயிட்டதா செய்தி பார்த்தேன். ஆனா நாங்க போனபோது அங்க ஒரு குட்டி யானை இருந்தது. அதுக்குள்ள வேற யானை வந்துடுச்சு.இதுக்கு அப்புறம் திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருவாதவூர், திருமோகூர் கோவில்களுக்கு போனோம், இந்த பதிவு ரொம்ப நீளமா போயிட்டதுனால, அதை அடுத்த பகுதியில பார்ப்போம்

16 comments:

ப்ரசன்னா said...

பதிவுலகத்தில் பலர் செய்வது போல் நானே முதல் பின்னூட்டம் போட்டுக்குறேன். ஆனா நானே ரெண்டாவது மூணாவது பின்னூட்டம் போடும்படி வெச்சுடாதீங்க......

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமையான படங்கள் ப்ரசன்னா.
நாட்டரசன் கோட்டை பற்றி அப்புறம் விரிவா எழுத முடியுமா?

//எனக்கு ரொம்ப கோவம் வந்தது. ஆனா, அந்த இடத்தில நான் அவங்களை கத்தினா, அவங்க செஞ்ச அதே தப்பை நானும் செய்வேன்னு நினைச்சு வாயை மூடிட்டு வந்துட்டேன்//

அட, திருமலையில் ஸ்ரீதேவியைக் கண்டேன் பதிவு போலவே இருக்கே, இந்த நிகழ்ச்சியும்! எனக்கும் சரி கோபம் இதே போல் வந்தது!

ப்ரசன்னா said...

வாங்க கண்ணபிரான்....

//அருமையான படங்கள் ப்ரசன்னா.
நாட்டரசன் கோட்டை பற்றி அப்புறம் விரிவா எழுத முடியுமா?// நாட்டரசன் கோட்டை படம் என்னுடையதல்ல flickr-ல் கிடைத்தது. கோவில் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஒரு முறை போனீங்கன்னா, உங்களால் விட முடியாது, கண்டிப்பாக மறுபடியும் போவீங்க...நாட்டரசன் கோட்டை ஊர் பற்றி எனக்கு நிறைய தெரியாது.

//அட, திருமலையில் ஸ்ரீதேவியைக் கண்டேன் பதிவு போலவே இருக்கே, இந்த நிகழ்ச்சியும்! எனக்கும் சரி கோபம் இதே போல் வந்தது!//
இந்த நிகழ்ச்சியை படித்தேன். உங்கள் நடை ரொம்ப நல்லா இருக்கு. ஆண்டவன் சன்னிதானத்தில் அப-வார்த்தைகளை சொல்லக்கூடாது என்று தெரியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள் போலிருக்கு. நீங்கள் கோபத்தை நியாயமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நான் சொன்னபோது எனக்கு அவமானம்தான் கிடைத்தது. பதிலுக்கு நானும் சண்டை போட்டிருக்கலாம். ஆனால் அந்த பெண் செய்த தவறை நானும் செய்ய விரும்பவில்லை.

வருகைக்கு நன்றி. இதுதான் உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன். அடிக்கடி வாங்க....

Anonymous said...

Superb pictures

ப்ரசன்னா said...

நன்றி அனானி....

துளசி கோபால் said...

நம்ம மாணவ(ர்)ன்னு நிரூபிச்சிட்டீங்க. இன்னும் ஒவ்வொரு கோயிலைப் பத்தியும்
விளக்கமா எழுதலாம்.

என்ன மதுரை அங்கயற்கண்ணி போயிருச்சா? (-:
அடப்பாவமே(-:

//. நகரத்தான் அதிகம் இருக்கும் ஊர்//

அதென்ன 'நகரத்தான்'னு சொல்லி இருக்கீங்க?

படங்களைப்பற்றி என் 'சொந்த' எண்ணம்.

கூடியவரை நாமே படம் எடுத்து வலை ஏத்தலாம். அப்பத்தான் அதுலே
நம்ம 'ஸ்பெஷல் டச்' இருக்கும்.

ஆகக்கூடி ஒரு 60 மார்க் போடறேன், க்ரேஸ் மார்க்கையும் சேர்த்துத்தான்:-))))))

ரெண்டாவது பகுதி இன்னும் நல்லா இருக்கணும்,ஆமா:-)

ப்ரசன்னா said...

வாங்க டீச்சர், ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்....

////. நகரத்தான் அதிகம் இருக்கும் ஊர்//

அதென்ன 'நகரத்தான்'னு சொல்லி இருக்கீங்க? //

தப்பாகிப்போச்சு டீச்சர். எழுத்துப்பிழை. சரி செஞ்சுட்டேன். சுட்டியதுக்கு நன்றி

//என்ன மதுரை அங்கயற்கண்ணி போயிருச்சா? (-:
அடப்பாவமே(-://

ஓ அந்த யானை பேரு அங்கயற்கண்ணியா??? எனக்கு தெரியாதே

//நம்ம மாணவ(ர்)ன்னு நிரூபிச்சிட்டீங்க. இன்னும் ஒவ்வொரு கோயிலைப் பத்தியும்
விளக்கமா எழுதலாம்.//
கோவில்களுக்கு போகும்போது இதைப் பற்றி எழுதும் எண்ணமில்லை அதுனால எல்லா விஷயத்தையும் கவனிக்கலை. அடுத்தமுறை முயற்சிக்கிறேன் டீச்சர்.

//
படங்களைப்பற்றி என் 'சொந்த' எண்ணம்.

கூடியவரை நாமே படம் எடுத்து வலை ஏத்தலாம். அப்பத்தான் அதுலே
நம்ம 'ஸ்பெஷல் டச்' இருக்கும்.//

அது ஒரு சோகக் கதை. நான் எடுத்துப்போன காமிரா திடீர்னு மக்கர் பண்ணிடுச்சு. அதுனால செல்பேசில தான் சில படங்கள் எடுத்தேன். அது ஒண்ணும் சரியா வரலை. அதுனால சொந்த படத்துக்கு வழியில்லாம போயிடுச்சு.

//ஆகக்கூடி ஒரு 60 மார்க் போடறேன், க்ரேஸ் மார்க்கையும் சேர்த்துத்தான்:-))))))

ரெண்டாவது பகுதி இன்னும் நல்லா இருக்கணும்,ஆமா:-//

அப்பாடா பாஸ் மார்க் வாங்கிட்டேன்.
ரெண்டாவது பகுதிக்கு கொஞ்சம் முயற்சி பண்ணுறேன். நாளைக்கு தவறாம வந்து பாருங்க டீச்சர்.

Thiyagarajan said...

Sir, Photo neega shoot pannatha ella netla shoot pannatha,
the photos are really good,

ப்ரசன்னா said...

//Sir, Photo neega shoot pannatha ella netla shoot pannatha,
the photos are really good,//

தியாகு. உள் குத்து நல்லா புரியுது. போட்டோ நல்லா இருக்கு, நான் எழுதினது நல்லா இல்லைன்னு சொல்லிருக்க... 2 போட்டோ நான் கேமராவில் சுட்டது. மத்தது நெட்டில் சுட்டது. சந்தோஷமா.....

Thiyagarajan said...

There is some problem with my fonts, so i couldn't read the text fully, Will i tell any thing wrong about your story, neenga yaaru, unga thiramia enna. I will change the fonts and read it

சிவமுருகன் said...

அட நம்ம ஊரு...
//ஆயிரங்கால் மண்டபம் எல்லாம் விளக்கிச் சொன்னேன். கொஞ்ச நாள் முன்பு யானை இறந்து போயிட்டதா செய்தி பார்த்தேன். ஆனா நாங்க போனபோது அங்க ஒரு குட்டி யானை இருந்தது. அதுக்குள்ள வேற யானை வந்துடுச்சு.//

ஆமா சார் கொஞ்ச நாளுக்கு முன்னால தான் இந்த அங்கயர்கன்னி அந்த அங்கயர்கன்னி கிட்ட போயி சேந்துருச்சி. :(. ரொம்ப நாளாவே ஒடம்பு சரியில்லாம தான் இருந்துச்சி. இத்தனைக்கும் அந்த யானை வெறும் 40+ தான். ரொம்ப கவலையா இருந்துச்சி.

நம்ம கணேஷ் (சின்ன யானை) 3-4 வருஷமா இருக்கார், புதுசில்ல பழைய யானை தான்.

நல்ல படங்கள்.

அடுத்த பதிவு எப்போது?

ப்ரசன்னா said...

வாங்க சிவமுருகன்

//அட நம்ம ஊரு...//

ஓ நீங்க மருதைக்காரரா...


//நம்ம கணேஷ் (சின்ன யானை) 3-4 வருஷமா இருக்கார், புதுசில்ல பழைய யானை தான்.
//

தகவலுக்கு நன்றி

//அடுத்த பதிவு எப்போது?// கொஞ்சம் ஆணி அதிகமா புடுங்கவேண்டியதா போச்சு. அதுனால இன்னிக்கோ நாளைக்கோ கண்டிப்பா வரும். நீங்க தவறாம வரணும்.

நன்றி.

Ram Viswanathan said...

Prasanna
First time to your Blog.. Like to writing style.. keep it up.. I am going to blogroll you..

Good Show..

ப்ரசன்னா said...

//Prasanna
First time to your Blog.. Like to writing style.. keep it up.. I am going to blogroll you..

Good Show..//

hi ram,

Thanks a lot for visiting. I'm really honored. Keep visiting & leave your comments.

Anonymous said...

//நாட்டரசன் கோட்டை ஊர் பற்றி எனக்கு நிறைய தெரியாது. //

எனது சொந்த ஊர் நாட்டரசன் கோட்டை என்பதால் எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லலாம் என நினைத்தேன்.

இந்த ஊரில் நீங்க சொன்ன மாதிரி கண்ணாத்தாள் கோவில் மிகவும் பிரபலம்.

இங்கு தான் 'கம்பர்' சமாதி இருக்கிறது.குழந்தைக்கு 2 அல்லது 3 வயது வந்ததும் இந்த சமாதிக்கு சென்று, அங்கு இருக்கும் மண்ணில் சிறிது எடுத்து தண்ணிருடன் கலந்து குடித்தால் நண்றாக படிப்பு வரும் என்று நம்பிக்கை.

கோவில் பற்றி நீங்க அடுத்த பதிவில் கூறுவீர்கள் என்பதால் நான் எதுவும் குறிப்பிடவில்லை.

Anonymous said...

//நாட்டரசன் கோட்டை ஊர் பற்றி எனக்கு நிறைய தெரியாது. //

எனது சொந்த ஊர் நாட்டரசன் கோட்டை என்பதால் எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லலாம் என நினைத்தேன்.

இந்த ஊரில் நீங்க சொன்ன மாதிரி கண்ணாத்தாள் கோவில் மிகவும் பிரபலம்.

இங்கு தான் 'கம்பர்' சமாதி இருக்கிறது.குழந்தைக்கு 2 அல்லது 3 வயது வந்ததும் இந்த சமாதிக்கு சென்று, அங்கு இருக்கும் மண்ணில் சிறிது எடுத்து தண்ணிருடன் கலந்து குடித்தால் நண்றாக படிப்பு வரும் என்று நம்பிக்கை.

கோவில் பற்றி நீங்க அடுத்த பதிவில் கூறுவீர்கள் என்பதால் நான் எதுவும் குறிப்பிடவில்லை.