Tuesday, June 12, 2007

அர்ஜுனன் தவம்

பல்லவர் பூமி -3

ஐந்து ரதங்கள் பார்த்து விட்டு அங்கிருந்து அர்ஜுனன் தவம் பார்க்க போனாம்.. ஒரு குன்றுக்கு பக்கத்தில இறக்கிவிட்டு மேல ஏற சொல்லிட்டாங்க.... நண்பகல் உச்சி வெயில் 12 மணிக்கு ஏறணுமுன்னு நினைக்கும் போதே சோம்பலாயிடுச்சு. இருந்தாலும் கூட வந்த வெளிநாட்டு அண்ணாத்தே பாக்கணுமுன்னு சொன்னதால, ஏற வேண்டியதாப் போச்சு......

மேலே ஏறும் பாதையை படத்தில் பாருங்க..... மரங்களுக்கு நடுவில் தெரிவது தான் பல்லவர் காலத்தின் கலங்கரை விளக்கம்.
மேல ஏறும் பாதையில் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கு... அதுக்கு மேல பல்லவர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும் இருந்தது... படத்தை பாருங்க.....
இதுதான் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கும் இடம்
இதுதான் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்.... வெயில் அதிகம் இருந்ததால மேலே ஏறவில்லை.


இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம். ஆனால் இப்போ இதுவும் உபயோகத்தில் இல்லை.இதைத் தாண்டி கீழே இறங்கும் வழி முழுவதும் சிற்பங்கள் நிறைய இருக்கு. ஒரு குன்று முழுவதும் சிற்பங்கள் செதுக்கி இருக்காங்கன்னா அந்த காலத்தில் சிற்பக்கலை எவ்வளவு சிறந்து விளங்கியிருக்க வேண்டும்... நினைச்சு பார்க்கவே ஆச்சரியமா இருக்கு... இப்பவும் கூட மாமல்லபுரத்தில் உளி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு.....

இதைப் பற்றி பேசிக்கிட்டே கீழே இறங்கினோம்.. அங்க ராயர் மண்டபம் இருக்கு. அதைப் பற்றி கேட்டால் மக்கள் உடனே சொல்லுவது தளபதி பற்றிதான்..... பல்லவர் காலத்து தளபதியில்லை........ நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச தளபதி படம்....... இங்கதான் ராக்கம்மா கையத்தட்டு பாட்டு எடுத்தாங்களாம்.... ஆஹா என்ன ஒரு சரித்திரப் புகழ் பெற்ற தலம்......................ராயர் பற்றி கேட்டா ரஜினி பத்தி சொல்லுறாங்க....என்னத்த சொல்ல....
பின்னர் கீழே கிருஷ்ணனின் வெண்ணை பந்து இருக்கு.... ஒரு பெரிய உருண்டையான பாறை... இன்னோரு பாறை மேல் எந்த பிடிப்பும் இல்லாம இருக்கு.... இதைத் தான் கிருஷ்ணரின் வெண்ணை உருண்டைன்னு சொல்லுறாங்க....சரி அர்ஜுனன் தவமுன்னு சொன்னாங்களே அதைக் காணோமேன்னு கேட்டா வண்டி நிறுத்திய இடத்துக்கிட்டயே இருக்குன்னு சொன்னாங்க... வெளில வந்து பார்த்தா உண்மையிலேயே மலைச்சு போயிட்டேன்......அந்த பாறையின் பக்கம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கிருக்காங்க...... படங்களைப் பாருங்க...


இதுல அர்ஜுனனை தேடி இந்த படத்தில் தலைக்கு மேல் கையை வெச்சு தவம் பண்ணுபவர்தான் அர்ஜுனன்னு நினைச்சேன்....


அவர் இல்லை இந்த படத்தில் தவக்கோலத்தில் இருப்பவர்தான்னு சொன்னாங்க..... சரியான்னு தெரியலை... தெரிஞ்சவங்க சொல்லுங்க.....

(தொடரும்)

பல்லவர் பூமி - 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்கள்
பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்

5 comments:

ப்ரசன்னா said...

அர்ஜுனனுக்கும் சோதனை.....

Anonymous said...

ஏன் எல்லா படமும் லாங் ஷாட்டிலே இருக்கு?

ப்ரசன்னா said...

வாங்க அனானி, அது வந்து... ரொம்ப வெயிலா இருந்ததுனால, நான் பக்கத்தில போகலை...என்னோட mobile phone camera-ல zoom இல்லை... அதுதான் காரணம்.

Anonymous said...

Enna recent post ellam orae aanmeegam sammantha pattatha irukku.. Ongalukku onnum avlavu vayasaakalenu ninaikkraen.. Yaen 70's fellow maatiri sinthikireenga.. Konjam youth aa thaan ezhuthurathu ??..

Ippo ellam athikam mathippu vaanganumnaa youthfull aa yosikkavum, ezhuthavum seyyanum..

Intha blog ezhuthravan ga ellam enakku theriga varaikkum most of the time summa thaan iruppaanga..

velaillatha ppo thaan intha maatiri yosanaellam varum..

Ithila neenga entha variety ya saernthavarnu theriyala ?..

Anyway unga bloga ellam paartha, konjam different aa thaan theriyuthu..

Yetho seyyreenga.. hmmm continue pannunga.. Nadakkattum...

ப்ரசன்னா said...

அனானி ஐயா,

1. என்னோட கடைசி 3 இடுகைகளும், பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த மகாபலிபுரம் பற்றியது. இது ஆன்மீகம் கிடையாது.
2. உங்களுக்கு ஆன்மீகமுன்னா என்னான்னே தெரியலைன்னு நல்லா தெரியுது. கோவில் பத்தி எழுதினா மட்டும் ஆன்மீகம் ஆகாது. வேணுமுன்னா பயணக் கட்டுரைன்னு சொல்லிக்கலாம். நான் போன கோவில்களை பற்றி பகிர்ந்துகிட்டேன் அவ்வளவுதான்.
3. ஆன்மீகம் வயசானவங்கதான் எழுதணுமுன்னு யார் சொன்னது. இன்னிக்கு நிறைய இளைஞர்கள் ஆன்மீகத்தில் பற்று கொண்டிருப்பது உங்களுக்கு தெரியாது போலிருக்கு.
4. எனக்கு எப்படி வருதோ அப்படிதான் எழுத முடியும். எனக்கு எதைப் பத்தி எழுதணுமின்னு தோணுதோ அதைப் பத்திதான் எழுதமுடியும். மத்தவங்க மதிக்கணுமுன்னு போலியா எழுத என்னால முடியாது.
5. இதெல்லாம் சொல்லுறதுனால நான் வயசானவன்னு நீங்க நினைச்சீங்கன்னா தாராளமா நினைச்சிட்டு போங்க..நான் கவலைப் படவில்லை.
6. வேலையில்லாதவங்கதான் பதிவு எழுதுவாங்கன்னு சொன்னதை நான் வன்மையா கண்டிக்கிறேன். தவறான கருத்து. தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்..
7. வருகைக்கு நன்றி