முதல்ல நான் போனது கடற்கரைக் கோவிலுக்கு. பேருதான் கோவிலே தவிர இப்போ இது கோவில் இல்லை. ஒரு புராதன சின்னமாதான் இருக்கு.
கோவிலுக்கும், ஐந்து ரதங்களுக்கும் டிக்கெட் வாங்கணும். நம்ம ஆட்களுக்கு ரூ.10. வெளிநாட்டினருக்கு USD 5 or ரூ.250. எங்களோட ஒரு வெளிநாட்டு அண்ணாத்தேயும் வந்திருந்தாரு. சரின்னு அவருக்கு 5 டாலர் கொடுத்தா வாங்க மாட்டேன்னுட்டாங்க... 250 தான் தரணுமாம். முதல்ல எனக்கு புரியலை. அப்புறம் வீட்டுக்கு வந்து இணையத்தில் பார்தப்போதான் புரிஞ்சது. 5 டாலர் இன்னிக்கு தேதிக்கு ரூ.203 தான். என்னத்த சொல்ல..... சரி கோவிலைப் பார்ப்போம்.
மாமல்லபுரத்தில் வித விதமான சிற்பக்கலைகள் இருக்கு. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள். இப்படி பல, இந்த கடற்கரைக் கோவில்களில் உள்ளவை பெரும்பாலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்
இங்க இருப்பது ரெண்டு கோவில்கள். படத்தில பார்த்தா ரெண்டு கோபுரங்கள் தெரியும். பெரிய கோபுரம் கடல் பார்த்து கிழக்கு நோக்கி இருக்கு.
இங்கே இருப்பது தாராலிங்கம் என்னும் லிங்கம். இது ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட கடப்பா கல்லினால் ஆன பட்டைகளை வைத்து உருவாக்கப் பட்டது. இது 8 அடி உயரத்தில் இருந்ததாம். இப்போ மேல் பாகம் உடைந்து இருக்கு. ஏதோ ஒரு போரில் சிதைக்கப்பட்டதாக சொல்லுறாங்க... ..
இந்த கோவிலுக்கு பின்புறம் ஒரு பெருமாள் சன்னதி இருக்கு. பள்ளி கொண்ட பெருமாள். இவர் ஒரே கல்லினால் ஆனவர். இவருக்கு நேர் கோட்டில் வெளியே ஒரு சிங்கமும், பலியிடப்பட்ட மானின் சிற்பமும் இருக்கு. இவைகளும், பெருமாளும் ஒரே கல்லினால் ஆனதாம். அதாவது உள்ளே இருக்கும் பெருமாளை செதுக்கிய அதே கல், வெளியே வரை நீண்டிருக்கு, அதிலேயே சிங்கமும், மானும் இருக்கும் பீடம் செதுக்கப் பட்டு இருக்கு. கேக்கவே பிரமிப்பா இருக்கு. எவ்வளவு திட்டமிட்டு இதை செய்து இருக்கணும். அசாதாரணமான கற்பனை வளம். சிங்கமும், பலியிடப்பட்ட மானும் கீழே இருக்கு பாருங்க..
கோவிலுக்கு வெளியே அகழ்வாராய்சி செய்யும்போது, இந்த இடத்தை கண்டு பிடிச்சிருக்காங்க.
இது ஆதிவராகர் சிலை. பன்றி முகம், யானை உடல், காளையின் கால்களைக் கொண்டது. பக்கத்திலேயே ஒரு தூணும், ஊற்றும் இருக்கு. இந்த ஊற்று தண்ணீர் சுவையாக இருக்குமாம்.
பல்லவர்காலத்தில இருந்த சிற்பக்கலை வளர்ச்சிக்கு இந்த கோவில் நல்ல சான்று. கடலுக்கு பக்கத்தில் இருப்பதால கொஞ்சம் சிதைஞ்சிருந்தாலும், நல்ல பாதுக்காப்பா பராமரிக்கிறாங்கன்னுதான் சொல்லணும். இதுமாதிரி 7 கோவில்கள் இருந்ததாகவும் இது 6வது கோவில். 5வது கோவிலின் அடித்தளம் சுனாமியினால் வெளியே வந்திருப்பதாகவும் சொன்னாங்க....
கோவில் வரலாறு சொல்லும் தகவல் பலகை
மேலும் சில படங்கள்
தொடரும்
13 comments:
சோதனை....முதல் பின்னூட்டம்
படங்கள் அருமை.
//வடுவூர் குமார் said...
படங்கள் அருமை. //
ரொம்ப நன்றி. இப்போதான் முதல் வருகைன்னு நினைக்கிறேன். நன்றி.
""""வடுவூர் குமார் said...
படங்கள் அருமை.
""""
ர்ர்ர்ர்ர்ரிப்பீட்டூ.... :)
நன்றி சங்கர்..... நானே எடுத்தது.
படங்களும் கட்டுரையும் அருமை.
//ஜெஸிலா said...
படங்களும் கட்டுரையும் அருமை. //
ரொம்ப ரொம்ப நன்றி, கட்டுரையும் அருமைன்னு சொன்னதுக்கு...
தகவல் பலகை சூப்பர்
Sir, Photo's and text super.
// Suresh Vasanth said...
தகவல் பலகை சூப்பர்
//
வாங்க சுரேஷ். நன்றி. உள்குத்து நல்லா புரியுது........
// Thiyagarajan said...
Sir, Photo's and text super. //
நன்றி தியாகு....
good pictures and i like your tamil writings..
how are u doing???
i am currently working for Ramco systems
talk to u soon
great sita. Give me a call when you have time. Thanks for your continuous support
Post a Comment