Tuesday, June 26, 2007

எட்டி 8டி பார்க்கிறேன்..எட்டுக்குள் நான்

எட்டுக்குள்ள நானும் இருக்கேன்....

அழைத்த சிவாக்கு நன்றி. என்னையும் ஒரு ஆளா மதிச்சு நீங்க கூப்பிட்டுருக்கறத நெனைச்சா புல்லரிக்குது.

ஆனா என்னைப் பத்தி பெருமையா சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் எழுதறது எவ்வளவு கஷ்டமுன்னு எழுத தொடங்கியதும்தான் தெரியுது.
நம்மள பத்தி சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் திரட்ட இன்னும் எட்டு வருஷம் ஆகும் போலிருக்கு... அப்புறம் மத்தவங்க எட்டு போட்டதை பார்த்து, சரி பெருமையான விஷயம்னு இல்லாம நம்மளை பத்தி எட்டு விஷயம் சொன்னாப் போதுமுன்னு நினைச்சு இந்த பதிவை எழுதுறேன். இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி சங்கிலி தொடர் விளையாட்டில் பங்கேற்றதில்லை. அதுனால, பதிவில் பிழையிருந்த நீங்க கொஞ்சம் கண்டுகிறாதீங்க... திரனா திரனா தன தன்னானே..... ஆஹா பாத்தீங்களா பதிவு எழுதிட்டிருக்கும்போதே பருத்தி வீரன் பாட்டுக்கு தாவிட்டேன். இதுதாங்க என்னைப் பத்தின முதல் விஷயம்.

இசையில்லாமல் நானில்லை. அது இதுன்னு குறிப்பிட்டு இல்லாம எல்லா விதமான இசையும் கேட்பேன். நான் என்ன வேலை செஞ்சுகிட்டு இருந்தாலும் பக்கத்தில இசை ஒலிச்சுக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி எனக்கு என்னவோ கையில்லாதது போல இருக்கும். கொஞ்சம் சுமாரா நல்லாவே பாடுவேன். பள்ளி நாட்களில் இருந்து தொடங்கி, கல்லூரி நாட்களிலும் பல விதமான பாட்டு போட்டிகளிலும் பங்கேற்று, எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பரிசு கண்டிப்பா வாங்கிடுவேன். பின்னர் முதுகலை படிக்கும் போது கர்நாடக சங்கீதத்தின் மீது பயங்கர ஆர்வம் வந்து அதை முறைப்படி கற்றுக் கொண்டேன். இப்போ ஓரளவுக்கு கர்நாடக சங்கீதமும் தெரியும். ஆணி பிடுங்க தொடங்கியதில் இருந்து, கற்றுக் கொள்வது தடை பட்டாலும், இசை ஆர்வம் இன்னும் குறையவில்லை. என் மகனுக்கும் இசை ஆர்வம் இருக்கும் போல் தெரிகிறது சந்தோஷமா இருக்கு.

அடுத்தது படிக்கும் ஆர்வம். எப்போ பார்த்தாலும் ஏதாவது படிச்சுகிட்டே இருப்பேன். சாப்பிடும் போதும் கூட. ஆங்கில தமிழ் நாவல்கள் எல்லாம் படிப்பேன். குமுதம், விகடன் எல்லாம் படிப்பேன். அனேகமாக எல்லா வாரப் பத்திரிக்கைகளும் எங்கள் வீட்டில் இருக்கும். எல்லாவற்றையும் படிப்பேன். படிக்க புதிதாக எதுவும் இல்லைன்னா ஏற்கனவே படிச்ச புத்தகம் ஏதாவது எடுத்து மறுபடி படிப்பேன். (இது weird list-ல் இருக்கணுமோ?) மாசம் கணிசமான தொகை புத்தகங்களுக்குனே ஒதுக்கி வெச்சுடுவேன்.

இப்போ எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டிருக்கு. அதுதான் இந்த பதிவு எல்லாம். என் பதிவுகளை படிச்சுட்டு துளசி டீச்சர் நல்லா எழுத வந்திருச்சுன்னு சொன்னதை கண்டிப்பா பெருமையா நினைக்கிறேன். (அவங்க சும்மா ஒரு ஆறுதலுக்கு சொல்லியிருந்தாலும்.......). அதுமட்டும் இல்லாம என் பதிவுகளை தொடர்ந்து படித்து என்னை உற்சாகப் படுத்தும் என் நண்பர்கள், குறிப்பா சீதா. இவங்களால்தான் நான் இன்னும் தொடர்ந்து பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். ( இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்க பாராட்டியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

இது மட்டும் இல்லாமல் நான் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் நான் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (on unified Messaging) பாராட்டப் பட்டு மிகச்சிறந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. அது சிங்கப்பூர் அரசாங்க நிறுவனத்துக்காக தயாரிக்கப் பட்டதால், சிங்கப்பூர் அரசாங்கமும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, அது நாளிதழிலும் வெளியானது.

கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது ஒரு கலைக்குழு துவக்கியது. அந்த ஊரில் ஆணும் பெண்ணும் பேசுவதே அபூர்வமாக இருந்த நேரத்தில், மாணவிகளை மிகுந்த சிரமப்பட்டு கலைக்குழுவில் சேர்த்து, பல பல்கலைக்கழக போட்டிகளுக்கும் கல்லூரியின் சார்பில் எங்கள் கலைக்குழு சென்று வெற்றிகள் பெற்றது. கலைக்குழு துவங்கியபோது, அதை "கடலை"க்குழு என்று கேலி செய்தவர்கள் பலர். ஆனால் அவர்களே பின்னால் அதற்காக வருத்தம் தெரிவித்தது.

எனக்கு நியாயம் என்று பட்டதை தயங்காமல் எல்லா இடத்திலும் சொல்லுவேன். இது எனக்கு பல இடைஞ்சல்களைத் தந்தாலும் இன்று வரை நான் இதிலிருந்து மாறவில்லை. இதையும் பெருமையாக நினைக்கிறேன்.

என்னைப் பற்றி யாராவது தவறாகப் புரிந்து கொண்டால், கண்டிப்பாக அவருக்கு நான் என் தரப்பு நியாயத்த்தை விளக்குவேன். அவர் தரப்பு நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பேன். இதனால் பெரும்பாலும் பிரச்சனைகள் சுலபமாக தீர்ந்துவிடும். இதனால் பணியிடத்திலும் சரி, நண்பர்கள் வட்டத்திலும் அவர்கள் பிரச்சனையை என்னால் தீர்த்துவைக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

இது தவிர நான் எப்போதும் நினைத்து பெருமைப் படும் எனது நண்பர்கள், குடும்பம். இந்த இரண்டு விஷயத்திலும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

அப்பாடி ஒருவழியா என்னைப் பத்தி 8 விஷ்யம் சொல்லிட்டேன். இப்போ நான் அழைக்கும் எட்டு பேர். (எட்டு ரொம்ப அதிகம்)

1. துளசி டீச்சர்.
2. குமரன்
3. ஜெஸிலா
4. மோகன் தாஸ்
5. தம்பி
6. அபி அப்பா
7. கொங்கு ராசா
8. வெட்டி

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

10 comments:

ப்ரசன்னா said...

நான் அழைத்த 8 பேரும் இன்னும் 8 போடலைன்னு நினைக்கிறேன். தயவு செயது 8 போடுங்க....

Anonymous said...

மிகவும் நன்றாக இருந்தது பிரசன்னா. நன்றிகள்.

சிவா
sivaramang.wordpress.com

ப்ரசன்னா said...

நிஜமாவா....

நன்றி சிவா.

Jazeela said...

வெற்றிகரமா எட்டுப் போட்டதற்கு வாழ்த்துகள்.

ப்ரசன்னா said...

நன்றி ஜெஸிலா... நீங்களும் சீக்கிரம் 8 போடுங்க...

பூனைக்குட்டி said...

http://imohandoss.blogspot.com/2007/06/blog-post_26.html

போட்டாச்சு போட்டாச்சு

ப்ரசன்னா said...

நன்றி மோகன். ரொமப வித்தியாசமா போட்டிருக்கீங்க...

Pavals said...

http://raasaa.blogspot.com/2007/06/blog-post_27.html

நாங்களும் எட்டு போட்டுட்டமில்ல :)

அழைப்புக்கு நன்றி..

ப்ரசன்னா said...

நன்றி ராசா

sita said...

hiprasanna
It is really a good article.
nan ennum ettu podaley.