Thursday, August 7, 2008

தொட்டபெட்டா ரோட்டு மேல...

வாங்க வாங்க.....இது ஊ.ம.சா-3.

நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்த முதல் பகுதி இங்கே....

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வந்த இரண்டாம் பகுதி இங்கே

சரவணன் சொன்ன நேரத்துக்கு வந்துட்டாரு... காலை உணவு சாப்பிட்டு தொட்டபெட்டாக்கு வண்டியிலே கிளம்பியாச்சு. போற வழியிலெல்லாம் இருக்கும் இடங்கள் பற்றி சரவணன் சொல்லிக்கிட்டே வந்தாரு... எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலுன்னு இருந்துச்சு, பாக்க பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு.

கோத்தகிரி ரோட்டுல போயி, தொட்டபெட்டாக்கு திரும்பும் இடத்திலிருந்து மேலே போக போக ரோடு ரொம்ப மோசமா இருந்துச்சு. வண்டிக்கு கட்டணம் வசூலிக்கிறாங்க.. ஆனா ரோட்டை பராமரிக்கவே இல்லை. என்ன இது எவ்வளவு சுற்றுலா பயணிங்க வராங்க... ரோடு நல்லா போடலாமில்லைன்னு சொன்னா, நம்ப சரவணன் சொன்னாரு, இந்த ரோடு 2 மாசத்துக்கு முன்னாடி போட்டது தானாம். என்னத்த சொல்றது..............என்ன கொடுமை சரவணன் இது?????????

ஒருவழியா வண்டி நிப்பாட்டும் இடத்துக்கு வந்து சேந்தாச்சு. ஆனா என்னாடா சிகரமுன்னு சொன்னாங்க... இங்க எதையும் காணோமேன்னு பார்த்தா...இதுக்கு மேல நடந்து போகணுமுன்னு சொன்னாங்க... கரடு முரடா இருந்த சின்னப் பாதையில ஏறினோம்... நம்ம வாண்டையும் தூக்கிக் கிட்டு, நம்ம உடம்பையும் தூக்கிகிட்டு ஏறுறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு.

மேல போனா அங்க நுழைவுச்சீட்டு வாங்கணுமுன்னு சொன்னாங்க...அதையும் வாங்கிட்டு... போனா ஊட்டியோட குளிரு என்னான்னு அங்கதான் நல்லா தெரிஞ்சது. ஆட்டிருச்சு ஆட்டி. தங்கமணி முன்னேற்பாடா sweater (இதுக்கு தமிழில் என்ன??....) எடுத்துட்டு வந்திருந்தாங்க.. நான் ரொம்ப பந்தாவா, ஜூலை மாசத்தில ஊட்டியில குளிராதுன்னு சொல்லி எதுவும் எடுத்துட்டு வரலை. ஊட்டிக்கு வந்தபோது கூட அவ்வளவு குளிராயில்லை... ஆனா தொட்டபெட்டாவுல குளிர் ஆட்டிருச்சு.. தங்கமணி நக்கலா என்னைப் பாத்தாங்க.."ஒழுங்கா sweater எடுத்துட்டு வந்திருக்கலாமுல்ல"ன்னு சொன்னாங்க. ஆனா நம்ம யாரு... குளிராத மாதிரியே... "இதெல்லாம் ஒரு குளிரா" எனக்கு ஒண்ணும் குளிரலைன்னு சொன்னா...."இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை"ன்னு பதில் வருது. எதுக்கு குறைச்சலில்லை?????

தொட்டபெட்டா சிகரத்தில பார்த்தா அருமையான இயற்கை காட்சிகள் எல்லாம் காணக்கிடைக்குது. ஒரு காட்சி முனை (view point) கட்டடம் இருக்கு. அது மேல ஏறினா அங்க தொலைநோக்கியை வச்சு ஊட்டி ரேஸ் கோர்ஸ் காமிச்சாங்க.. நானும் பார்த்தேன்.. என்னக்கு என்னமோ பச்சையா தெரிஞ்சது...(no....அந்தப் பச்சையில்லை. நான் சொன்னது Green அந்தப் பச்சை. தமிழில் எல்லா வார்த்தைக்கும் இன்னோரு அர்த்தம் இருக்குடா சாமி)

சிகரத்தின் மேலேயே ரொம்ப நேரம் இருந்தோம்.. சின்னப் பூங்கா ஒண்ணு இருந்தது... நல்லா பராமரிச்சு வச்சிருந்தாங்க... அங்கேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து ரசிச்சிட்டு இருந்தோம்.

அப்போ நம்ம சரவணன் இந்த இடம் திருடா திருடா படத்தில் வரும் என்ற சரித்திரக் குறிப்பு சொன்னாரு. இந்த மாதிரி நிறைய சரித்திரக் குறிப்புகள் சொன்னாரு.. அதையெல்லாம் உங்களுக்கு சொல்லுவது என்னோட கடமை.

சரி தொட்ட பெட்டா வந்துட்டோமே... முட்டை பரோட்டா சாப்பிடலாமான்னு பார்த்தா... அது கிடைக்கலை. ஆனா சுட சுட மிளகாய் பஜ்ஜி இருந்துச்சு. அதை விடலாமா... ஒரு கை பாத்தாச்சு... குளிரில் சூடான பஜ்ஜி சூப்பரா இருந்துச்சு.

இங்கயே இருந்தா நேரமாகிடும் அடுத்து கோத்தகிரி வழியா கொடநாடு போகலாமுன்னு கிளம்பி, மறுபடி அதே வண்டி நிறுத்தும் இடத்துக்கு சின்னப் பாதை வழியா இறங்கி வந்தோம். அந்த பாதை முழுவதும் சின்ன சின்ன கடைகள். தொப்பி, கண்ணாடி, சூடான கடலை, கேரட் எல்லாம் இருந்தது. கேரட் அப்போத்தான் பறிச்சா மாதிரி பாக்குறதுக்கு சூப்பரா இருந்தது.

ஒருவழியா வண்டிக்கு வந்து ஏறி கொடநாடுக்கு கிளம்பியாச்சு..... அடுத்த பகுதியில போயிடலாம்....................



(தொடரும்...)

12 comments:

ப்ரசன்னா said...

சோதனை

Anonymous said...

yeah! its much better,

Thiyagarajan said...

me the firsta? !

Good fotos sir.

//இதெல்லாம் ஒரு குளிரா" எனக்கு ஒண்ணும் குளிரலைன்னு சொன்னா...."//

damager sorry managernguratha adikkiadi prove pannuringa sir :)

Unknown said...

அருமையான பதிவு.
நான் தொட்டபெட்டா தொலைநோக்கி இல்லத்தில் இருந்து ஊட்டியைப் பார்த்த போது அங்குள்ள தேவாலயம் அழகாக தெரிந்தது.

Thiyagarajan said...

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாக‌னும்.

நிறையா பிளாக்குலா பார்க்குறேன் முதல் பின்னுடத்த‌ பிளாக்கோட‌ சொந்தக்கார‌ங்களே "சோத‌னை"ன்னு போடுராங்க‌. அது ஏன்?

ப்ரசன்னா said...

// small cap stocks said...

yeah! its much better//

நெம்ப நன்றி

// Thiyagarajan said...

me the firsta? !

Good fotos sir.//

நன்றி தியாகு.

//damager sorry managernguratha adikkiadi prove pannuringa sir :)//

என்ன பண்ணுறது தியாகு, என் ரத்தத்தில் ஊறிப் போச்சுன்னு நினைக்கிறேன். நீ இப்படி சைக்கிள் gapல ஆட்டோ ஓட்டுறியே தியாகு.

ப்ரசன்னா said...

//களத்துமேடு said...

அருமையான பதிவு.
நான் தொட்டபெட்டா தொலைநோக்கி இல்லத்தில் இருந்து ஊட்டியைப் பார்த்த போது அங்குள்ள தேவாலயம் அழகாக தெரிந்தது.//

நன்றி களத்து மேடு. அங்கிருந்த நாலு தொலைநோக்கிகளில் ஒன்று தான் வேலை செய்தது. அதுக்கும் பெரிய கூட்டமிருந்த்தால் பொறுமையாக பார்த்து ரசிக்க முடியவில்லை.

அடிக்கடி வாங்க களத்து மேடு


//Thiyagarajan said...

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாக‌னும்.

நிறையா பிளாக்குலா பார்க்குறேன் முதல் பின்னுடத்த‌ பிளாக்கோட‌ சொந்தக்கார‌ங்களே "சோத‌னை"ன்னு போடுராங்க‌. அது ஏன்?//

மத்தவங்களைப் பத்தி தெரியாது. ஆனா நான் தமிழ்மணத்துக்கு "அளி"த்த் பிறகு, சமீபத்திய பின்னூட்டப் பெட்டியில் தெரியுதான்னு பாக்கத்தான் சோதனை பண்ணுறேன் தியாகு. இப்போ புரிஞ்சதா இந்த சோப்பை ஏன் நான் வாங்கினேன்னு.... சாரி, ஏன் நான் சோதனை பண்ணுறேன்னு?

Thiyagarajan said...

//மத்தவங்களைப் பத்தி தெரியாது. ஆனா நான் தமிழ்மணத்துக்கு "அளி"த்த் பிறகு, சமீபத்திய பின்னூட்டப் பெட்டியில் தெரியுதான்னு பாக்கத்தான் சோதனை பண்ணுறேன் தியாகு. இப்போ புரிஞ்சதா இந்த சோப்பை ஏன் நான் வாங்கினேன்னு.... சாரி, ஏன் நான் சோதனை பண்ணுறேன்னு?//

ஓ. இது தான் மட்டரா. தாங்ஸ் ஃபார்த‌ இம்பர்மேச‌ன்.

//நீ இப்படி சைக்கிள் gapல ஆட்டோ ஓட்டுறியே தியாகு.//

சார், நீங்க‌ என்னேட குரு. உங்காள‌ நான் கலாயப்பனா ! :-).

ப்ரசன்னா said...

//சார், நீங்க‌ என்னேட குரு. உங்காள‌ நான் கலாயப்பனா ! :-).//

தியாகு அது யாரு கலாயப்பன்???

Thiyagarajan said...

Sorry for the spelling mistake.

Premkumar said...

Vikadan,Kumutham koda release agiduchu, nega eppa next episode a release panuviga. egarly waiting..

ப்ரசன்னா said...

tuesday release prem.