சரி சீரியஸ் விஷயம் போதும். காமெடிக்கு வருவோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படிச்சேன். படிச்சதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. என்ன தெரியுமா, நிலாவில் நிலம் வாங்கறதுதான். (நிலவில் நிலம்... கவிதையா இருக்கே... இதையே தலைப்பா வெச்சிருக்கலாமோ?)
இப்போ அமெரிக்காவில் இது ரொம்ப தீவிரமா நடக்குதாம். இணையத்தில் தேடிப் பார்த்தபோது இது ரொம்ப காலமா நடக்குறது தெரிய வந்தது. ஒரு ஏக்கர் $25 தான். சென்னையில் நிலம் வாங்குவதை விட ரொம்ப ரொம்ப மலிவு. நீங்க நிலம் வாங்கினா, அதுக்கான பட்டா, உங்க நிலத்தோட போட்டோ எல்லாம் தராங்களாம்.
இந்த இணையதளம்தான் அதிகார பூர்வ விற்பனையாளராம்.
யாரு இவங்களுக்கு அதிகாரம் குடுத்ததுன்னுதான் தெரியலை. நமக்கு சொந்தமான இடத்தைத் தானே நாம விற்க முடியும். இவங்க நிலாவில் இருக்கும் இடத்தை விற்கிறாங்களே.. அப்படின்னா மொத்த நிலாவும் இவங்களுக்கு சொந்தமாயிடுச்சா? அப்படின்னா இவங்களுக்கு யாரு நிலாவை வித்தது? இவங்களை மாதிரியே இன்னும் நிறைய பேரு விக்கிறாங்களே...அவங்களுக்கும் அதே நிலா சொந்தமா? எனக்கு எதுவும் புரியலை சாமி.