Showing posts with label மறுபடியும். Show all posts
Showing posts with label மறுபடியும். Show all posts

Wednesday, July 16, 2008

மறுபடியும்.....

நான் முதலில் பதிவு எழுதத் தொடங்கியது 2004ம் ஆண்டு நவம்பரில்தான். எனக்கு பதிவுகளின் அறிமுகம் அப்போது தான் கிடைத்தது. ஆனால் அப்போது எழுதுவதை விட படிப்பதில் தான் நாட்டம் அதிகம் இருந்தது. அப்போது தொடங்கி எல்லா பதிவர்களின் பதிவுகளையும் விடாமல் படித்து வந்தேன்....

மறுபடியும் 2007 ஜனவரியில் தான் நானும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது....என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஏதோ படித்த செய்திகளை வைத்து பதிவுகள் என்ற பெயரில் ஏதோ எழுதி வந்தேன். பின் நான் சென்று வந்த பயணங்களைப் பற்றி எழுதினேன்... தொடர்ந்து 2007 மே மாதம் வரை எழுதி வந்தேன்.

2007 ஜூலை மாதத்தில் சில சொந்த பிரச்சனைகள் காரணமாக எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. 2007 செப்டம்பரில் புதிய வேலையில் சேர்ந்தேன்... புதிய இடம், புதிய சூழல், வேலைப் பளுவும் பொறுப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலை...அப்போது தொடங்கி பதிவுகள் படிக்ககூட என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை....

மறுபடியும்....இப்போது எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நண்பர்களின் வற்புறுத்தல்தான். என்னால் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி பதிவிட முயற்சிப்பேன்.....

மறுபடியும், "மறுபடியும்...." என்ற பதிவு எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன்.


disc : மேலே இருக்கும் படம் நான் எடுத்ததுதான். ஊட்டியில். இதனால் என்ன தெரியுது? நான் அடுத்ததா ஊட்டி பயணத்தைதான் எழுதப்போறேன்.....