மீனாட்சி அம்மன் கோவிலில் நான் எடுத்த முக்குறுணி விநாயகர் படம். செல்பேசியில் எடுத்ததால் கொஞ்சம் மங்கலாக இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.... பெரிய உருவம்.
கோவிலில் தவறாமல் பார்க்க வேண்டிய இன்னோரு இடம் ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளி சிலைகள். சொக்கநாதர் சன்னதிக்கு அருகில் இருக்கு. 4 பெரிய சிலைகள். முன்னாடி எல்லாம், வெண்ணை சாத்துறோம் பேர்வழின்னு மக்கள் வெண்ணை உருண்டைகளை சிலைகள் மேல் தூக்கி எறிவாங்க.. அதுனால 4 சிலைகளுமே வெண்ணை உருண்டைகளோட பயங்கரமா இருக்கும். இப்போ அதை தடை பண்ணிட்டாங்களாம். இப்போதான் அந்த சிலைகளோட முழு அழகும் தெரியுது. தடை விதிச்சவங்களுக்கு நன்றி.


அங்கே இருக்கும் இன்னோரு குறிப்பிட வேண்டிய விஷயம் பிரசவ சிலை. சொக்கநாதர் சன்னதிக்கு போகும் வழியில் ஒரு ஆஞ்சநேயர் சிலை தூணிலேயே இருக்கும். அதுக்கு செந்தூரம் தடவி ஆரஞ்சு கலரில் பார்த்தவுடனே பளிச்சுன்னு தெரியும். அதுக்கு எதிரே இன்னோரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் சிலை இருக்கு. கர்ப்பிணி பெண்கள் அதை வழிபட்டு அதுக்கு எண்ணை தடவினால், சுகப்பிரசவம் ஆகும்னு ஒரு ஐதீகமாம்.
கோவிலை விட்டு வெளியே வரும் வழியில், ஆயிரங்கால் மண்டபம் அருகே கயிறுகள், படங்கள், டாலர்கள், மணிகள், மரச் சாமான்கள் இதுபோல பலவும் விற்கும் கடைகள் ஏராளம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டமாக அந்த கடைகளில் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். கடைக்காரர்களுக்கு நல்ல வருமானம்னு நினைக்கிறேன்.மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் போனோம். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
தொடரும்......



