இந்த சனிக்கிழமை, என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கும்போதுதான், landmark-க்கு இந்த மாச போணி பண்ணவேயில்லைன்னு ஞாபகம் வந்துச்சு. அடடா, தெய்வகுத்தம் ஆகிபோயிடுமேன்னு, உடனே landmark போய்ட்டேன். ரொம்ப யோசிச்சு, 2 புத்தகம், 5 CDs(1 Video, 5 Audio) வாங்கிட்டேன்.
ஒரு புத்தகம், project management பற்றியது. இன்னொன்னு, Aruthur Hailey - The money changers.
Project Management பற்றிய - A Comedy of Errors by "Prasanna kumar" (நான் இல்லை) படிச்சு முடிச்சாச்சு. Project Manager மட்டுமில்லாம, பொட்டி தட்டும் எல்லாரும் கணடிப்பாக படிக்கவேண்டும். (programmer, project manager and top management). இதை எழுதியிருப்பது, நம்ம சென்னை ஆளு. அதனால, அவருக்கு நாம எப்படியெல்லாம் யோசிப்போமுன்னு, நல்லா தெரிஞ்சிருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்காரு. ஆரம்பம் முதல், முடிவு வ்ரைக்கும் நல்ல நகைச்சுவை இருக்கு. அதுனால, படிக்கும்போது, bore-ஆ இல்லாம ரொம்ப ரசிக்க முடியுது. Hindu பேப்பரில் இந்த புத்தக விமர்சனம் வந்திருக்கு. அதைப் படிக்க இங்க போகணும். ِ