Friday, December 28, 2007

கொஞ்சம் சீரியஸ்…..கொஞ்சம் காமெடி

நேற்று மாலை பேநசீர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். இது எல்லாருக்கும் தெரியும். ஆனா 5:30 மணிக்கு காரில் ஏறும்போது அவர் நினைத்திருப்பாரா இன்னும் 5 நிமிடத்தில் இற்க்கப்போவதை. சிரித்துக் கோண்டே அவர் படியில் இறங்கி வருவதை பார்க்கும் போது மனசுக்குக் நொன்ப கஷ்டமாக இருந்தது. என்ன பண்றது, மனுஷனோட வாழ்க்கை இப்படித்தானே இருக்கு. எப்போ என்ன நடக்குமுன்ண்னு யாருக்கும் தெரியாது. இது ஒரு வகையில நல்லதுன்னும் நினைக்கிறேன். ஒருவேளை தெரிஞ்சா வாழ்க்கை சுவையா இருக்காதுன்னு தோணுது. ரஜினி சொன்ன மாதிரி சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்.


சரி சீரியஸ் விஷயம் போதும். காமெடிக்கு வருவோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படிச்சேன். படிச்சதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. என்ன தெரியுமா, நிலாவில் நிலம் வாங்கறதுதான். (நிலவில் நிலம்... கவிதையா இருக்கே... இதையே தலைப்பா வெச்சிருக்கலாமோ?)


இப்போ அமெரிக்காவில் இது ரொம்ப தீவிரமா நடக்குதாம். இணையத்தில் தேடிப் பார்த்தபோது இது ரொம்ப காலமா நடக்குறது தெரிய வந்தது. ஒரு ஏக்கர் $25 தான். சென்னையில் நிலம் வாங்குவதை விட ரொம்ப ரொம்ப மலிவு. நீங்க நிலம் வாங்கினா, அதுக்கான பட்டா, உங்க நிலத்தோட போட்டோ எல்லாம் தராங்களாம்.

இந்த இணையதளம்தான் அதிகார பூர்வ விற்பனையாளராம்.

யாரு இவங்களுக்கு அதிகாரம் குடுத்ததுன்னுதான் தெரியலை. நமக்கு சொந்தமான இடத்தைத் தானே நாம விற்க முடியும். இவங்க நிலாவில் இருக்கும் இடத்தை விற்கிறாங்களே.. அப்படின்னா மொத்த நிலாவும் இவங்களுக்கு சொந்தமாயிடுச்சா? அப்படின்னா இவங்களுக்கு யாரு நிலாவை வித்தது? இவங்களை மாதிரியே இன்னும் நிறைய பேரு விக்கிறாங்களே...அவங்களுக்கும் அதே நிலா சொந்தமா? எனக்கு எதுவும் புரியலை சாமி.




Friday, December 21, 2007

பேசுகிறேன் பேசுகிறேன்


பேசுகிறேன் பேசுகிறேன்

உன் இதயம் பேசுகிறேன்

புயல் அடித்தால் கலங்காதே -

நான் பூக்கள் நீட்டுகிறேன்


எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....



கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ


முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே....


வளைவில்லாமல் மலை கிடையாது

வலியில்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா.....

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னைக் காக்கவே தானாய் வளருமே


பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்

பெண்ணே கொஞ்ச நேரம்தானே

உன்னைத் தோண்டினால்

இன்பம் தோன்றுமே


விடியாமல்தான் ஓர் இரவேது

வடியாமல்தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா...

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..


படம் : சத்தம் போடாதே

பாடல் : நா. முத்துக்குமார்

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : நேஹா பேசின்



சமீபமாக வந்த பாடல்களில் எனக்கு பிடித்தவற்றை உங்களோட பகிர்ந்துக்கலாமுன்னு நினைச்சேன். அதன் முதல் படி தான் இது. இந்த பாடலின் வரிகளுக்காகவே என்னைக் கவர்ந்த பாடல் இது..


பாட்டைக் கேட்க இங்க போகலாம்...

புகைப்படம் : http://outdoors.webshots.com/photo/2272177600087250223wWnUDC

Tuesday, August 14, 2007

India Day நிசமா??

இது எனக்கு இப்போதான் email-ல் வந்தது....வாஷிங்டனில் ஆகஸ்ட் 15ம் தேதியை இந்தியா நாள் (India Day)ன்னு அறிவிச்சிருக்காங்களாம். அதுக்கான வாஷிங்டன் மாகாண கவர்னரின் உத்தரவு இதுதானாம்.... நிசமான்னு தெரியலை.... தெரிஞ்சவங்க சொன்னா சந்தோஷமா இருக்கும்.... உண்மையா இருந்தால் ரொம்ப சந்தோஷம்.

வைரம் வைரம்

என்னோட கோடானு கோடி வாசகர்களுக்கு (!!!) (சரி சரி....இதெல்லாம் கண்டுக்காதீங்க :-))

இந்தியன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா.....

இது சுதந்திர தின வைர விழா......

சக இந்தியர் அனைவருக்கும்

இனிய சுதந்திர தின

வைர விழா வாழ்த்துக்கள்


Wednesday, July 18, 2007

ஙே !!!!!!!!

ஆமாங்க நான் இதைப் பார்த்த போது அப்படித்தான் முழிச்சேன்.

இந்த படத்தைப் பாருங்க...





Keyboard failiure.....
Strike F1 to continue, F2 to run setup utility.


என்ன சொல்லுறதுன்னே தெரியலை போங்க.... அதுதான் Keyboard failiure-ஆ இருக்கே... அப்புறம் எப்படி F1 / F2 தட்ட முடியும்?

Microsoft Rocks.......... chanceless...........

பி.கு : ஆமா இந்த படத்தை புகைப்பட போட்டிக்கு அனுப்பலாமோ????



Wednesday, July 4, 2007

உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு நிமிடம் please

நீங்கள் சென்னையைச் சேர்ந்தவரா? உங்களுக்கு Computer realated services தேவைப்படுகிறதா? இதை ஒருநிமிஷம் படியுங்கள்....

நமது வெற்றிக்கு பின்னால் பலர் இருந்திருக்கிறார்கள்
சிலரது உயர்விற்காவது நாம் உதவியாய் இருப்போம்"

Tuesday, June 26, 2007

எட்டி 8டி பார்க்கிறேன்..எட்டுக்குள் நான்

எட்டுக்குள்ள நானும் இருக்கேன்....

அழைத்த சிவாக்கு நன்றி. என்னையும் ஒரு ஆளா மதிச்சு நீங்க கூப்பிட்டுருக்கறத நெனைச்சா புல்லரிக்குது.

ஆனா என்னைப் பத்தி பெருமையா சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் எழுதறது எவ்வளவு கஷ்டமுன்னு எழுத தொடங்கியதும்தான் தெரியுது.
நம்மள பத்தி சொல்லிக்கிற மாதிரி எட்டு விஷயம் திரட்ட இன்னும் எட்டு வருஷம் ஆகும் போலிருக்கு... அப்புறம் மத்தவங்க எட்டு போட்டதை பார்த்து, சரி பெருமையான விஷயம்னு இல்லாம நம்மளை பத்தி எட்டு விஷயம் சொன்னாப் போதுமுன்னு நினைச்சு இந்த பதிவை எழுதுறேன். இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி சங்கிலி தொடர் விளையாட்டில் பங்கேற்றதில்லை. அதுனால, பதிவில் பிழையிருந்த நீங்க கொஞ்சம் கண்டுகிறாதீங்க... திரனா திரனா தன தன்னானே..... ஆஹா பாத்தீங்களா பதிவு எழுதிட்டிருக்கும்போதே பருத்தி வீரன் பாட்டுக்கு தாவிட்டேன். இதுதாங்க என்னைப் பத்தின முதல் விஷயம்.

இசையில்லாமல் நானில்லை. அது இதுன்னு குறிப்பிட்டு இல்லாம எல்லா விதமான இசையும் கேட்பேன். நான் என்ன வேலை செஞ்சுகிட்டு இருந்தாலும் பக்கத்தில இசை ஒலிச்சுக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி எனக்கு என்னவோ கையில்லாதது போல இருக்கும். கொஞ்சம் சுமாரா நல்லாவே பாடுவேன். பள்ளி நாட்களில் இருந்து தொடங்கி, கல்லூரி நாட்களிலும் பல விதமான பாட்டு போட்டிகளிலும் பங்கேற்று, எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பரிசு கண்டிப்பா வாங்கிடுவேன். பின்னர் முதுகலை படிக்கும் போது கர்நாடக சங்கீதத்தின் மீது பயங்கர ஆர்வம் வந்து அதை முறைப்படி கற்றுக் கொண்டேன். இப்போ ஓரளவுக்கு கர்நாடக சங்கீதமும் தெரியும். ஆணி பிடுங்க தொடங்கியதில் இருந்து, கற்றுக் கொள்வது தடை பட்டாலும், இசை ஆர்வம் இன்னும் குறையவில்லை. என் மகனுக்கும் இசை ஆர்வம் இருக்கும் போல் தெரிகிறது சந்தோஷமா இருக்கு.

அடுத்தது படிக்கும் ஆர்வம். எப்போ பார்த்தாலும் ஏதாவது படிச்சுகிட்டே இருப்பேன். சாப்பிடும் போதும் கூட. ஆங்கில தமிழ் நாவல்கள் எல்லாம் படிப்பேன். குமுதம், விகடன் எல்லாம் படிப்பேன். அனேகமாக எல்லா வாரப் பத்திரிக்கைகளும் எங்கள் வீட்டில் இருக்கும். எல்லாவற்றையும் படிப்பேன். படிக்க புதிதாக எதுவும் இல்லைன்னா ஏற்கனவே படிச்ச புத்தகம் ஏதாவது எடுத்து மறுபடி படிப்பேன். (இது weird list-ல் இருக்கணுமோ?) மாசம் கணிசமான தொகை புத்தகங்களுக்குனே ஒதுக்கி வெச்சுடுவேன்.

இப்போ எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டிருக்கு. அதுதான் இந்த பதிவு எல்லாம். என் பதிவுகளை படிச்சுட்டு துளசி டீச்சர் நல்லா எழுத வந்திருச்சுன்னு சொன்னதை கண்டிப்பா பெருமையா நினைக்கிறேன். (அவங்க சும்மா ஒரு ஆறுதலுக்கு சொல்லியிருந்தாலும்.......). அதுமட்டும் இல்லாம என் பதிவுகளை தொடர்ந்து படித்து என்னை உற்சாகப் படுத்தும் என் நண்பர்கள், குறிப்பா சீதா. இவங்களால்தான் நான் இன்னும் தொடர்ந்து பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். ( இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்க பாராட்டியிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

இது மட்டும் இல்லாமல் நான் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் நான் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (on unified Messaging) பாராட்டப் பட்டு மிகச்சிறந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. அது சிங்கப்பூர் அரசாங்க நிறுவனத்துக்காக தயாரிக்கப் பட்டதால், சிங்கப்பூர் அரசாங்கமும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, அது நாளிதழிலும் வெளியானது.

கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது ஒரு கலைக்குழு துவக்கியது. அந்த ஊரில் ஆணும் பெண்ணும் பேசுவதே அபூர்வமாக இருந்த நேரத்தில், மாணவிகளை மிகுந்த சிரமப்பட்டு கலைக்குழுவில் சேர்த்து, பல பல்கலைக்கழக போட்டிகளுக்கும் கல்லூரியின் சார்பில் எங்கள் கலைக்குழு சென்று வெற்றிகள் பெற்றது. கலைக்குழு துவங்கியபோது, அதை "கடலை"க்குழு என்று கேலி செய்தவர்கள் பலர். ஆனால் அவர்களே பின்னால் அதற்காக வருத்தம் தெரிவித்தது.

எனக்கு நியாயம் என்று பட்டதை தயங்காமல் எல்லா இடத்திலும் சொல்லுவேன். இது எனக்கு பல இடைஞ்சல்களைத் தந்தாலும் இன்று வரை நான் இதிலிருந்து மாறவில்லை. இதையும் பெருமையாக நினைக்கிறேன்.

என்னைப் பற்றி யாராவது தவறாகப் புரிந்து கொண்டால், கண்டிப்பாக அவருக்கு நான் என் தரப்பு நியாயத்த்தை விளக்குவேன். அவர் தரப்பு நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பேன். இதனால் பெரும்பாலும் பிரச்சனைகள் சுலபமாக தீர்ந்துவிடும். இதனால் பணியிடத்திலும் சரி, நண்பர்கள் வட்டத்திலும் அவர்கள் பிரச்சனையை என்னால் தீர்த்துவைக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

இது தவிர நான் எப்போதும் நினைத்து பெருமைப் படும் எனது நண்பர்கள், குடும்பம். இந்த இரண்டு விஷயத்திலும் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

அப்பாடி ஒருவழியா என்னைப் பத்தி 8 விஷ்யம் சொல்லிட்டேன். இப்போ நான் அழைக்கும் எட்டு பேர். (எட்டு ரொம்ப அதிகம்)

1. துளசி டீச்சர்.
2. குமரன்
3. ஜெஸிலா
4. மோகன் தாஸ்
5. தம்பி
6. அபி அப்பா
7. கொங்கு ராசா
8. வெட்டி

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.