Wednesday, August 27, 2008

கொடநாடு காட்சிமுனை....

ஊட்டி மலைச் சாரலிலே...4

ஆணி கொஞ்சம் அதிகமா போனதுனால அடுத்த பகுதி உடனே எழுதமுடியலை. அதுக்குள்ள கோடிக்கணக்கான தனிமடல் வந்திருச்சு. (சரி... சரி.....)

நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்த முதல் பகுதி இங்கே....
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வந்த இரண்டாம் பகுதி இங்கே
தொட்டபெட்டா ரோட்டுமேல இங்கே.... இது வரைக்கும் படிக்கலைன்னா உடனே படிச்சிடுங்க..

கொடநாடு, கோத்தகிரியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் இருக்கு. போற வழி சுமாராதான் இருந்துச்சு. ஆனா வழியெங்கும் பச்சைப் பசேலுன்னு டீ எஸ்டேட்களும், தோட்டங்களும் இருந்தது. நாங்க போகும் போது நல்ல மேகமூட்டமா வேற இருந்துச்சா... பார்ககவே அமர்க்களமா இருந்துச்சு.. வண்டியை நிறுத்தி நிறுத்தி நல்லா பார்த்து ரசிச்சுகிட்டே போனோம். போகும் வழியில் இருந்த ஒரு அழகான கிராமம் கீழே.கொடநாடு எல்லையிலேயே "அந்த" எஸ்டேட் இருக்கு. சும்மா சொல்லக் கூடாது நாங்க பார்த்ததிலேயே அருமையா பராமரிச்சு பார்க்கவே அழகா இருந்தது அந்த எஸ்டேட் தான். மொத்தம் 9 கேட். கேட் 4 கிட்டதான் பங்களா இருக்கு. நாங்க போன சமயத்தில "அவங்க" அங்கதான் இருந்தாங்க. அதுனால போலீஸ் பாதுகாப்பு இருந்துச்சு. பங்களா தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவிலே இந்த காட்சி முனை இருக்கு.

நாங்க போனபோது எங்களைத் தவிர இன்னும் இரண்டு பேர் மட்டும்தான் அங்க இருந்தாங்க.. இப்படி ஒரு சுற்றுலா தலத்தில் ஆளே இல்லாமல் இருந்ததுனால இங்க எதுவுமே இருக்காது போல இருக்கே. தேவையில்லமா வந்துட்டோமோன்னு நினைச்சேன். காட்சிமுனை கோபுரத்தின் மேலே ஏறிப்பார்த்தபோதுதான நான் நினைச்சது எவ்வளவு தப்புன்னு தெரிஞ்சது.

என்ன அருமையான காட்சி. என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த இடங்களில் இதுவும் ஒண்ணு. அதை விவரிக்க வார்த்தைகள் போதாதுங்க. சுத்தி வர மலைகள். நடுவில் பசுமை பள்ளத்தாக்கு. அந்த அழகே அழகு. அந்த பள்ளத்தாக்கின் முடிவில் ஒரு கிராமம். (தெங்குமராடா).. அருகே பாயும் மோயார் நதி. அந்த நதி அப்படியே சென்று பவானியில் கலக்குது. அப்பர் பவானி அணையின் அழகும் தெரியுது. ஆஹா என்ன அருமை. என்னைக் கேட்டால் உலகத்திலேயே வாழ அழகான இடம் அந்த தெங்குமராடா கிராமமுன்னு தான் சொல்லுவேன். என்ன அருமையான சூழல். காட்சிமுனை கோபுரத்தில் இருந்து பார்த்தால்தான் இந்த இடம் எவ்வளவு உயரத்தில் இருக்குன்னு தெரியுது. பக்கத்திலேயே ரங்கசாமி சிகரம் இருக்கு. அதைவிட உயரத்தில் இருக்கு இந்த இடம். உண்மையிலேயே காலடியில் மேகங்கள் தவழுது. பறவைப் பார்வைன்னு சொல்லுவாங்களே. அதை இங்க சூப்பரா அனுபவிக்கலாம்.

அழகான பசுமை பள்ளத்தாக்கு, அதில் ஓடும் நதிகள், அங்கே ஒரு அழகிய கிராமம், அணைக்கட்டு, சுற்றிலும் சூரியனின் வெள்ளி பூச்சு பூசியதுபோல சூரிய ஒளியில் குளிக்கும் மலைகள், ஆஹா வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

சொல்ல மறந்துட்டேனே...இந்த அழகான தெங்குமராடா கிராமத்தில் தான் அன்னக்கிளி படத்தில் மச்சானைத் தேடும் பாடலை படமாக்கினாங்களாம். இந்த சரித்திரக் குறிப்பை எனக்கு சொன்னது டிரைவர் சரவணன்.

கீழே படத்தில் இருப்பதுதான் ரங்கசாமி சிகரம்.

கீழே படத்தில் கீகீகீழே.... தெரிவதுதான் தெங்கமராடா அருகில் மோயார் நதி


ரங்கசாமி சிகரமும் பவானி அணையின் ஒரு பகுதியும் கீழேதெங்கமராடா கிராமத்திற்கு இந்த காட்சி முனையிலிருந்து இறங்கி ட்ரெக்கிங் செல்லலாமாம். ஆனால் அதுக்கு வனத்துறை அனுமதி பெற வேண்டுமாம். இந்த இடத்தில் சூரிய உதயமும் அஸ்தமனமும் அருமையாக இருக்கும் என்று சரவணன் சொன்னார்.


காட்சி கோபுரத்தின் கீழே ஒரே ஒரு கடை இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு இருவது படிகள் கீழிறங்கி செல்லலாம். போனால் இதே அழகை அங்கிருந்தும் ரசிக்கலாம். நாங்க இதை பார்த்து ரசித்துக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியலை. ரொம்ப நேரம் அங்கேயே இருந்தோம். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள், பொதுவாக இங்கே வருவதில்லைன்னு சரவணன் சொன்னாரு. நீங்க ஊட்டி போனீங்கன்னா இந்த இடத்துக்கு கண்டிப்பா போங்க... தவறவிடாதீங்க...

ஒருவழியா மனசே இல்லாம அங்கிருந்து கிளமபி.. கோத்தகிரி வழியாவே ஊட்டி வந்தோம். சரவணன் அடுத்து எங்களை அழைத்து போன இடம் டீத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலை. பறித்த தேயிலைகளில் இருந்து டீ எப்படி தயாராகுதுன்னு காமிச்சாங்க. நல்லா இருந்தது. கூடவே குடிக்க டீயும் குடுத்தாங்க... ஊட்டி டீன்னா ஊட்டி டீதான். சூப்ப்ரா இருந்துச்சு. அங்கயே டீத்தூள் எல்லாருக்கும் வாங்கிகிட்டோம். ஊட்டியில பல இடங்களில் டீத்தூள் வித்தாலும் தரமான டீத்தூள் வாங்கணுமுன்னா நீங்க இங்கதான் (The nilgiri tea factory)போகணும். அங்க புதுசா வெள்ளை டீ ஒண்ணு இருந்துச்சு. அது குடிச்சா அவ்வளவு நல்லதாம், பல வியாதிகள் குணமாமுமாம். விலை ரொம்ப அதிகம். நான் பச்சை டீ தான் கேள்விப்பட்டிருக்கேன். வெள்ளை டீ இங்கதான் பார்த்தேன். இன்னொன்னு, இங்க கிடைக்கிற நீலகிரி தைலமும் நல்ல தரமானதா இருக்கு. Home made chocolates கூட நல்லா இருக்கு.

அங்கிருந்து நேரா நாங்க போனது, பொட்டானிக்கல் கார்டன் ஆனா எல்லாரும் அசதியா இருந்ததுனால இன்னொருநாள் போயிக்கலாமுன்னு உள்ளேயே போகாம திரும்பிட்டோம். அங்கிருந்து நேரா பையன் ரொம்ப ஆசைப் பட்டதுனால போட்டிங் போனோம். அங்க விளையாட்டுகள் நிறைய இருக்கு. ஆனா நாங்க படகுல மட்டும் போயிட்டு, அங்கிருந்த மினி ரயிலிலும் போயிட்டு திரும்பிட்டோம்.

6:30 மணிக்கெல்லாம் நல்லா இருட்டி போச்சு. நேரா தங்கிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நல்ல குளிரு வேற.ரூமில தரையில கால வைக்க முடியலை. என்னதான் heater போட்டாலும் வேலைக்காகலை. இருந்த கம்பளியை எடுத்து நல்லா போத்திகிட்டு பெட்டு மேலயே உட்கார்ந்திருந்தேன். 8 மணிக்கு இரவு உணவு தயாராகிடுச்சுன்னு விக்ரம் வந்து சொன்னாரு. குளிருக்கு இதமா சுடச் சுட அருமையான உணவு ரெடியா இருந்துச்சு. சாப்பாட்டுக்கு அப்புறம் என்ன சுகமான தூக்கம்தானே. நாள் முழுவதும் சுத்தினதுதான தூக்கம் சொக்கிடுச்சு. கொஞ்ச நேரம் டி.வி பாத்திட்டு தூங்கியாச்சு.

(தொடரும்................)

6 comments:

ப்ரசன்னா said...

என் எழுதிய பதிவுகளிலேயே நீளமான பதிவு இதுதான்னு நினைக்கிறேன்.

Thiyagarajan said...

Koodanadu is wonderfull place. Home made chocolates are really good there. But the sad thing when I brought it back to chennai most of the chocolates melted.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

...αηαη∂.... said...

நானும் அங்க போக ப்ளான் பண்ணிட்டே இருக்கேன்..,